லண்டனில் உள்ள விண்ட்சர் கோட்டையில், இங்கிலாந்து இளவரசி எலிசபெத் ராணியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
விண்ட்சர் கோட்டைக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அதிபர் பைடன், கருப்பு ரேஞ்ச் ரோவரில் ராணியை சந்திக்கக் கம்பீரமாகச் சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோட்டையில் சுமார் ஒருமணி நேரம் ராணியுடன் கலந்துரையாடிய அவர், மீண்டும் ஹெலிகாப்டரில் ஏறி விமான நிலையம் சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பைடன், "எலிசபெத் ராணியின் உருவத்தையும், அவரது பெருந்தன்மையும் பார்க்கையில் எனது தாயாரின் நினைவு தான் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த ஒப்பீட்டை மேற்கொள்வதால் அவமதிக்கப்பட்டதாக அவர் நினைக்க மாட்டார் எனக் கருதுகிறேன்.
அதுமட்டுமின்றி அவர் மிகவும் கருணை மிக்கவராக உள்ளார். இது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. ரஷ்ய அதிபர் புதின், சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் குறித்து அவர் அறிந்துகொள்ள விரும்பினார். நாங்கள் நல்ல உரையாடலை மேற்கொண்டோம்" எனத் தெரிவித்தார்.
விண்ட்சர் கோட்டையில் ராணியைச் சந்தித்த நான்காவது அமெரிக்க அதிபர் பைடனாகும். முன்னதாக, 2018 இல் ட்ரம்ப், 2016 இல் ஒபாமா, 2008 இல் ஜார்ஜ் டபிள்யூ புஷ் , 1982இல் ரீகன்ஸ் ஆகியோர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இஸ்ரேலில் புதிய அரசு: முடிவுக்கு வந்த 12 ஆண்டுகால ஆட்சி!