உலகின் முன்னணி பொருளாதார பெருஞ்சக்திகளான ஜி-7 நாடுகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகியவற்றின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. அதிபராகப் பொறுப்பேற்றபின் ஜோ பைடன் பங்கேற்கும் முதல் சர்வதேச கூட்டம் என்பதால் உலக நாடுகள் இவரது உரையை உன்னிப்பாக எதிர்பார்த்துள்ளன.
இந்தக் கூட்டத்தில், கோவிட்-19 பெருந்தொற்று - சர்வதேச அரசியலில் அதன் தாக்கம் என்ற நோக்கிலும், சர்வதேச அரங்கில் சீனாவின் எழுச்சி என்ற நோக்கிலும் அவர் பேசுவார் என அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 காரணமாக இம்முறை ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் மெய்நிகர் வாயிலாக நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: மெக்ஸிகோவுக்கு 8.7 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பிவைத்த இந்தியா