அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக யார் களமிறங்கப்போவது என்பது குறித்த விவாதப் போட்டி அங்கு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
போட்டியாளர்கள் ஒவ்வொரு மாகாணமாகச் சென்று ஜனநாயகக் கட்சியனரிடையே தங்களது ஆதரவைத் திரட்டி வருகின்றனர். அந்த வகையில், பல்வேறு மாகாணங்களுக்குச் சேர்த்து ஒரே நாளில் நடத்தப்படும் "சூப்பர் ட்யூஸ்டே" போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கடந்த சில வாரங்களாக வெற்றிமுகமாக வலம்வந்த செனட் உறுப்பினர் பெர்னி சான்டர்ஸை பின்னுக்கு தள்ளி, அந்நாட்டு முன்னாள் துறை அதிபர் ஜோ பிடன் முதலிடத்தை பிடித்தார்.
அதையடுத்து, இன்று இரண்டாவது சூப்பர் ட்யூஸ்டே போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள ஜோ பிடன் முதலிடத்தை தக்க வைப்பதில் நம்பிக்கையுடன் உள்ளார்.
இதையும் படிங்க : சூப்பர் ட்யூஸ் டே: சான்டர்ஸுக்கு சறுக்கல், ஜோ பிடனுக்கு அமோக வெற்
றி