வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பரப்புரை தகவல் தொடர்பு இயக்குனர் கேட் பெடிங்ஃபீல்ட் தலைமையில் அனைத்து பெண் மூத்த தகவல்தொடர்பு குழுவை நியமித்துள்ளார்.
பெடிங்ஃபீல்ட் ஜோ பைடனின் வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குநராக பணியாற்றுவார். நீண்டகால ஜனநாயக கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜென் சாகி அவரது பத்திரிகை செயலாளராக பணியாற்றுவார்.
சாக்கி ஏற்கனவே பைடனின் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் மாற்றத்திற்கான முக்கிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக பணியாற்றுகிறார். பெடிங்ஃபீல்ட் மற்றும் சாக்கி ஆகியோர் ஒபாமாவின் நிர்வாக குழுவின் மூத்தத் தலைவர்களாக இருந்தவர்கள்.
அமெரிக்க மக்களுடன் நேரடியாகவும் உண்மையாகவும் தொடர்புகொள்வது ஒரு அதிபரின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும், மேலும் அமெரிக்க மக்களை வெள்ளை மாளிகையுடன் இணைக்கும் மிகப்பெரிய பொறுப்பை இந்தக் குழு செயல்படுத்தும் என்று ஜோ பைடன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தகுதிவாய்ந்த, அனுபவம் வாய்ந்த தொடர்பாளர்கள் தங்கள் பணிக்கு மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டு செயல்படுகின்றனர். மேலும் இந்த நாட்டை மீண்டும் சிறப்பாகக் கட்டியெழுப்புவதற்கான முழுமையான அர்ப்பணிப்பையும் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸின் தலைமைத் தலைவராக இருந்த கரின் ஜீன் பியர், அதிபரின் முதன்மை துணை பத்திரிகை செயலாளராக பணியாற்றுவார்.
மேலும், பைடனின் பரப்புரையில் கூட்டணிகளுக்கான தகவல் தொடர்பு இயக்குநராக இருந்த பில்லி டோபர், வெள்ளை மாளிகையின் துணை தகவல் தொடர்பு இயக்குநராக இருப்பார்.
இதையும் படிங்க: அதிபர் மாளிகை தகவல்கள் ஜோ பைடனுக்கு பரிமாற்றம்!