ETV Bharat / international

தேர்தலை நீர்த்துப்போகச் செய்ய ட்ரம்ப் முயற்சி - பிடன் குற்றச்சாட்டு!

வாஷிங்டன: நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளில் ட்ரம்ப் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Apr 24, 2020, 3:45 PM IST

Biden
Biden

அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரைகளுக்கு ஜோ பிடன் நிதி திரட்டும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ஆன்லைன் வழியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய பிடன், அதிபர் தேர்தலை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளில் ட்ரம்ப் ஈடுபடத் தொடங்கிவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் 650 நன்கொடையாளர்கள் மத்தியில் பேசிய பிடன், "அதிபர் தேர்தலின்போது இப்போதுள்ள நிலைமை தொடரும்பட்சத்தில், அனைவரும் வாக்களிக்க ஏதுவான வசதிகளை நாம் மேற்கொண்டு தரவேண்டும். ஆனால் இதற்கு அதிகம் செலவாகும்.

இதற்காக மத்திய அரசு மாகாணங்களுக்கு அதிக நிதியளிக்க வேண்டும். அப்போதுதான் தபால் வாக்குப்பதிவிற்கு தேவையான ஏற்பாடுகளை அவர்களால் மேற்கொள்ள முடியும். நாடு முழுவதும் மக்கள் தபால் மூலம் வாக்களிக்க ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து வாக்களிப்பதை முற்றிலும் நிறுத்த தேவையில்லை. வாக்குப்பதிவு மையங்களில் முறையான சுகாதார முன்னேற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

முன்னதாக புளோரிடா மாகாணத்தில் கடந்த மாதம் நடைபெற்ற முதன்மை அதிபர் தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தபால் முறையில் வாக்களித்தார். இருப்பினும், தபால் முறையில் வாக்களித்தால் அதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம் என்றும் ட்ரம்ப் சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதிபர் தேர்தலை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளில் நடைபெறுவது குறித்துக் கூறுகையில், "ட்ரம்ப் ஏற்கனவே அதிபர் தேர்தலை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். தபால் துறைக்கு அதிக நிதி ஒதுக்கினால், கோவிட்-19 பரவலுக்கான அத்தியாவசிய நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படும் என்று மிரட்டுகின்றனர்" என்றும் பிடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் அறிவித்துள்ள 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தில் தபால் துறை நேரடியாக எந்த பலனும் பெறாது. ட்ரம்ப்பின் இந்த முயற்சியை அமெரிக்காவின் எந்த குடிமகனும் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சீனாவைத் தொடர்ந்து தரவுகளை மாற்றும் அமெரிக்கா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.