பிரேசிலின் முக்கிய நகரங்களில் ஒன்றான சாவ் பாலோவின் மையப் பகுதியில் உள்ளது சாவ் பாலோ சர்வதேச விமானநிலையம்.
இங்கு, காவல் துறையினர் போல் உடையணிந்து பயங்கர ஆயுதங்களுடன் விமான நிலையத்துக்குள் நுழைந்த கும்பல் ஒன்று, 750 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துள்ளது.
காவல்துறையினர் பயன்படுத்தும் ரோந்து வாகனங்கள் போன்று காட்சியளித்த இரண்டு வாகனங்களில், இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து, சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஜார்டிம் பேன்டானல் என்ற இடத்தில், அந்த கார்களை நிறுத்திவிட்டு இந்த கும்பல் தப்பி சென்றிருப்பதாக, காவல்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
தப்பிச்சென்ற கொள்ளையர்களை அந்நகர காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் சாவ் பாலோ நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.