நெட்பிலிக்ஸ், அமேசான் போன்ற இணையவழி ஒளிபரப்பு தளங்கள் சமீபத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இவ்வகை ஒளிபரப்பு தளங்களில் பெரிதும் விரும்பி பயன்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில், பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தனது புதிய மென்பொருள் சார்ந்த பொருட்களை இன்று அறிமுகப்படுத்த உள்ளது. ஒரு பில்லியன் டாலர் முதலீட்டில் புதிய வகை ஒளிபரப்பு சேவையை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இன்று நடைபெறவுள்ள இந்த அறிமுக விழாவில் இதன் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைக்கப்படும். இந்த ஒளிபரப்பு தளத்தில் முன்னணிபடைப்பாளர்களின் குறும்படங்கள், ஆவணப்படம் போன்றவை ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இணையவழி ஒளிபரப்புத் தளத்தில் ஆப்பிள் நிறுவனங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.