ETV Bharat / international

காபூல் விமானநிலையத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெறலாம் - ஜோ பைடன்

காபூல் விமான நிலையத்தில் அடுத்த 24 மணி முதல் 36 மணி நேரத்திற்குள் பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்
author img

By

Published : Aug 29, 2021, 9:50 AM IST

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 13 அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று காலை ஆப்கான் நாட்டின் நங்ஹகர் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இதில் விமான நிலைய குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் கொல்லப்பட்டுவிட்டதாகவும், அமெரிக்காவின் பாதுகாப்புப் படைத் தலைமையகமான பென்டகன் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, " ஆப்கனில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து ஆலோசித்தேன். இது பயங்கரவாதிகள் மீதான கடைசி தாக்குதல் கிடையாது.

அப்பாவி மக்களை கொன்ற ஒவ்வொருவரையும் தேடி வேட்டையாடுவோம். காபூல் விமானநிலையத்தில் நிலைமை தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது.

ராணுவ தளபதிகள் தகவலின்படி, காபூல் விமான நிலையத்தில் அடுத்த 24 மணி முதல் 36 மணி நேரத்துக்குள் பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம்.

அமெரிக்காவுக்கோ , அமெரிக்க வீரர்களுக்கோ யாராவது தீங்கு விளைவிக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

காபூலில் அசாதாரண சூழல் நிலவி வந்தாலும், மக்களை மீட்டு வரும் பணி தொடர்ந்துகொண்டு இருக்கிறது. நேற்று நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் உள்ளிட்ட 6,800 பேர் மீட்கப்பட்டுள்ளனர்" என பைடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தடுப்பூசி போடலைனா ரூ.15 ஆயிரம் சம்பளத்துல பிடிப்பு - அமெரிக்க ஏர்லைன்ஸ் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.