அமேசான் காட்டு தீ கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக காட்டை அழித்து வருகின்றது. கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெக்டர் நிலங்கள் தீயினால் நாசமாகியுள்ளது. பல்வேறு மரங்கள், தாவரங்கள், தீயில் அழிந்த நிலையில் விலங்குகளும் அதில் பாதிப்புக்குள்ளாகின. விலங்குகள், பறவைகள் தீயின் சூட்டில் கருகி உயிரிழந்தது.
இந்நிலையில் அமேசான் காட்டுத் தீயில் இருந்து தப்பி வந்த விலங்குகளுக்கு, தன்னார்வலர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். கண் இல்லாமல், உடல் பாகங்கள் தீயில் கருகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் விலங்குகளுக்கு வன ஆர்வலர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். காட்டில் தீ அணைந்த பின், மீண்டும் விலங்குகள் வனத்தில் விடப்படும் என்று தன்னார்வலர்கள் கூறியுள்ளனர். தன்னார்வலர்களின் இச்செயல்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.