இன்றைய உலகில் ஓரே இடத்திலிருந்து வேலை செய்வதை விட விதவிதமான அட்வன்சர் வேலைகள் செய்வதில் தான் மக்களுக்கு ஆர்வம் அதிகம். குறிப்பாக வெளிநாடுகளில் இப்படிப்பட்ட வேலைகள் அதிகளவில் காணப்படும்.
நியூயார்க்கைத் தலைமை தளமாகக் கொண்ட அமெரிக்கன் மரிஜுவானா (American Marijuana) ஆன்லைன் இதழ் , கஞ்சாவில் உள்ள மருத்துவத் தன்மைகளை ஆராய்ச்சி செய்து வருகிறது. ஆனால், தற்போது "பலவகையான கஞ்சா தயாரிப்புகளை" சோதித்து மதிப்பாய்வு செய்யும் பணிக்கு ஆட்கள் வேண்டுமென அறிவித்துள்ளது
இந்த பணியில், பல வகை கஞ்சாக்களைச் சுவைத்து விமர்சித்தால் போதும், சம்பளமாக இந்திய மதிப்பில் சுமார். ரூ 2.25 லட்சம் வரை தரத் தயாராக உள்ளது அந்நிறுவனம்!
அவர்கள் கேமரா முன்பு அமர்ந்து, கஞ்சாவை சுவைத்து மதிப்பாய்வு செய்ய வேண்டும். மேலும், அவர்களின் உடல் நிலை ஆரோக்கியமானதாகவும், கஞ்சா பற்றிய விரிவான அறிவும் இருக்க வேண்டும் எனப் பல நிபந்தனைகள் தெரிவித்துள்ளனர் மேலும் அவர்கள் இருப்பிடத்தில் கஞ்சா சட்டப்பூர்வமானதாகும். இப்பணியில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு கஞ்சா வகைகளின் தயாரிப்புகளைப் பெட்டியில் அனுப்பி வைக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் கூறுகையில், " அறிவிப்பு வெளியான 48 மணி நேரத்தில் 3000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றார்.
இதையும் படிங்க: இளவரசி டயானா கவுன் மீண்டும் ஏலம்... இந்த முறை இத்தனை கோடிகளா?!