டெல்லி: உலகின் பழமையான ஜனநாயக நாடு என்ற பெயர் பெற்ற அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, தேர்தல் வன்முறை வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை உறுதிபடுத்தும்விதமாக, அங்குள்ள தனியார் மற்றும் வர்த்தக கட்டிடங்கள் கட்சிக்காரர்களால் நிறைந்துள்ளன. இந்த அசாதாதாரணமான சூழலுக்கு தற்போதைய அதிபர் ட்ரம்ப்பின் நிலைப்பாடு தான் காரணம் என்று, அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர் மீரா சங்கர் கூறியுள்ளார்.
யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், இரண்டாவது முறையாக தாம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். இதற்காக தனது ஆதரவாளர்களை களத்தில் இறக்கியுள்ள அவர், தான் வெற்றிபெறவில்லை என்று அறிவித்த பின்னர், அதை ஏற்கக் கூடாது என்றும் போராட்டங்களில் குதிக்குமாறும் கூறியிருக்கிறார்.
அவரது இந்த நிலைப்பாட்டால், அங்கு தேர்தலுக்குப் பின் இதுவரை கண்டிராத மிகப் பெரிய கலவரம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, மீரா சங்கர் மேலும் தெரிவித்துள்ளார். மூத்த செய்தியாளர் ஸ்மிதா ஷர்மாவுடன் இது தொடர்பாக கலந்துரையாடிய மீரா சங்கர், இதுவரை அமெரிக்காவின் தேசிய நலன், வெளியுறவுக் கொள்கையில் கவனம் செலுத்திய அரசியல் தலைவர்கள், இப்போது பதவியில் அமர்வதற்கு தங்கள் போக்கை மாற்றிக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவருக்கு எதிராக களமிறங்கும் ஜோ பைடன் ஆகியோரின் அரசியல் நிலைப்பாடு, அதனால் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து மீரா சங்கர் அளித்த பேட்டியின் சுருக்கம் இதோ.
கேள்வி: உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாட்டில் தேர்தலுக்காக மிகப் பெரிய அளவில் வன்முறை வெடிக்கும் என்று கூறுகிறீர்களா?
இது நிச்சயமாக யூகிக்க முடியாத காட்சிகள் தான். அமெரிக்க வரலாற்றில் இப்படியொரு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தற்போதைய அதிபர் ட்ரம்பின் கடந்த தேர்தல் வெற்றி கூட யாரும் எதிர்பார்க்காதது தான். தற்போதைய பதட்டமான சூழலை மேலும் அதிகரிக்கும்விதமாக, தேர்தலில் தான் தோல்வியடைந்தால் அதை ஏற்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ள ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியினர் தபால் வாக்குகளில் மோசடி செய்யவுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
தேர்தல் போட்டியில் பின் தங்கியுள்ள ட்ரம்ப், அந்நாட்டின் தேர்தல் முறையை விமர்சித்திருப்பது கடும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கும் அவரது கட்சியினர், தற்போது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது மேல் மேலும் கொதித்துப் போய் கலவரங்களில் ஈடுபட ஆயத்தமாகிவிட்டனர்.
கேள்வி- இதுவரை அமெரிக்காவில் நடந்த தேர்தல்களைப் போல் அல்லாமல், இந்த ஆண்டு நடக்கும் தேர்தல் அந்நாட்டு வரலாற்றில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்கிறீர்களா?
ஆமாம், நிச்சயமாக. களத்தில் நிற்கும் இருவேறு வேட்பாளர்களும் இருவேறு கொள்கைகளையும் வாக்குறுதிகளையும் முன்வைத்துள்ளனர். பொருளாதாரக் கொள்கை, சுகாதார சிக்கல்கள், பருவநிலை மாற்றங்கள் பிரச்சனை, மின் ஆற்றல் கொள்கை அல்லது வெளியுறவுக் கொள்கை என மிக முக்கிய கொள்கைகளில் வெவ்வேறு விதமாக நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
இருதரப்பினரும் தங்களது கொள்கைகளை மக்களிடத்தில் நியாயப்படுத்தி ஆதரவைப் பெருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இப்படி வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட குழுக்களை அமெரிக்கா இதுவரை பார்த்ததில்லை. இவர்களது பொருளாதாரக் கொள்கை மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றை நடுநிலைவாதிகளிடம் புகுத்த அதிக முயற்சிகள் எடுத்து வருவதால், குடியரசு அல்லது ஜனநாயக வேட்பாளர்களில் ஒருவரை நடுநிலைவாதிகள் ஆதரிக்கக் கூடும். ஆனால், இதுவரை இருந்த அமெரிக்காவின் தேசிய நலன் என்பது காற்றில் கரையும் என்பது நிதர்சனம்.
இருவேறு கட்சிகள், இருவேறு கொள்கைகளால் அமெரிக்க தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. குடியசுக் கட்சியானது டீ பார்ட்டி இயக்கத்துடனும், வலது சாரி கொள்கையுடனும் களமிறங்கியுள்ளது. மற்றொருபுறம், ஜனநாயகக் கட்சி அதிகளவு இளைஞர் பிரதிநிதிகளுடன் இடதுசாரி கொள்கைகளோடு களத்தில் நிற்கிறது. தற்போதைய நிலவரப்படி, அதிபர் ட்ரம்ப்பை அகற்ற வேண்டும் என்பதில் ஒட்டுமொத்த ஜனநாயக் கட்சியும் முனைப்புடன் உள்ளது. இதற்காக நடுநிலைவாதியான துணை அதிபர் பைடனுக்கு இடது சாரி முக்கிய தலைவர்களில் முக்கியமானவரான பெர்னீ சாண்டர்ஸ் தனது ஆதரவை அளித்துள்ளார்.
ஒருவேளை தேர்தல் முடிவில் ஜோ பைடன் வெற்றி பெற்றால், அவரது இடதுசாரியினர் டொனால்ட் மற்றும் ட்ரம்ப்புக்கு எதிராக உள்ள குடியரசுக் கட்சியின் நடுநிலைவாதிகளையும் ஒருங்கிணைத்து, அனைவரிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்க வேண்டும். பாரம்பரிய குடியரசுக் கட்சியில் முன்னாள் அதிபர்கள் ரீகன் அல்லது ஜார்ஜ் புஷ் சீனியர் அல்லது ஜார்ஜ் புஷ் ஜூனியருடன் பணியாற்றியவர்கள் முற்றிலும் ட்ரம்ப்புக்கு எதிராக களமிறங்கியிருப்பதுடன், ஆப்ரஹாம் லிங்கன் பெயரில் துவக்கப்பட்ட லிங்கன் ப்ராஜெக்ட் விவகாரத்தை கையெலெடுத்துள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக வெளிப்படையாக பேசியுள்ள அவர்கள், பைடனுக்கு வாக்களிக்கும் படி விளம்பரங்களில் கேட்டுள்ளனர். ஆனாலும் ட்ரம்ப்பின் சொந்தத் தொகுதியில் 42 சதவீத ஆதரவுடன் வலுவாக உள்ளார். இந்த இக்கட்டான சூழலிலும் அவருக்கான இந்த ஸ்திரமான ஆதரவு ஆச்சரியமளிப்பதாகவே உள்ளது.
இதுமட்டுமின்றி, வெற்றிபெறுவதற்காக பல சாதூர்யமான நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறார் ட்ரம்ப். போராட்ட அறிகுறிகளால் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் வெள்ளை இன வாக்களர்கள் அவருக்கு மீண்டும் வாக்களிக்க வாய்ப்புள்ளது. ஆப்பிரிக்க, லத்தீன் கறுப்பினத்தவர்களின் வாக்குகளைக் கவர்வதற்காக, கொரோனா காலத்துக்கு முன் அவர்களது வேலையில்லா திண்டாட்டத்தை பெருமளவு குறைத்துள்ளதாக, ட்ரம்ப் பேசி வருகிறார்.
கேள்வி: அமெரிக்காவில் பலகட்சி முறை ஏன் வளர்ச்சி அடையவில்லை?
இருகட்சி அமைப்பை கையாள்வதில் அவர்கள் சிரமம் கொள்வதாகவே எனக்குத் தெரிகிறது. அதிபர் தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்களையும் அவர்கள் நிறுத்துகிறார்கள். அல் கோர் இதற்கு ஓர் உதாரணம். கடந்த முறை கூட ஹிலா்ிக்கு எதிராக சுயேட்சை வேட்பாளர்களை களமிறக்கினர். ஆனாலும் அமெரிக்க வரலாற்றில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளைத் தவிர வேறு கட்சியினர் பெரிதாக வளர முடியவில்லை.
இரண்டு கட்சிகளும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், வெவ்வேறு தளங்களில் இயங்கினாலும், வேறு ஒருவரை வளர விடுவதில்லை. இடது சாரி, வலது சாரி என பிரிந்திருந்தாலும் ஒரேமாதிரி செயல்படுகின்றன. ஜனநாயகக் கட்சியில் இடதுசாரி பிரிவு என்பது எப்படி ஓர் அங்கமோ, அது போலவே டீ பார்ட்டி என்பது வேறு அல்ல, அது குடியரசுக் கட்சியின் ஓர் அங்கம்.
கேள்வி- தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் அமெரிக்காவின் கருத்துக்கணிப்புகள் பொய்த்துப் போன நிலையில், ஜோ பைடன் முன்னிலை பெறுவார் என்ற கருத்துக்கணிப்புகள் மெய்யாகுமா?
பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தேசிய அளவில் பைடன் முன்னிலை பெறுவார் என்றே கூறப்படுகிறது. இறுதி வாரம் அல்லது கடந்த 15 நாட்களில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளைப் பார்த்தால், பைடனுக்கு தேசிய அளவில் 7.8 முதல் 10 சதவீத முன்னிலையை அவர்கள் அளித்திருப்பது தெரியவரும்.
இப்போது, யார் அதிபராக வருவார் என்பது கேள்வியல்ல. கல்லூரி வாக்குகளும், மாநில வாரியான வாக்குகளும் யாருக்கு அதிகமாக வரப் போகிறது என்பது தான் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது கடந்த முறை அதிபர் ட்ரம்ப்பை விட ஹிலாரி 3 மில்லியன் பிரபலமான வாக்குகள் பெற்றிருந்தாலும், அவர் கல்லூரி வாக்குகளை மிகக் குறைவாகப் பெற்றதால் தோல்வியடைந்தார்.
பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அளித்ததால் அங்கெல்லாம் ஹிலாரி தோல்வியடைந்தர். ஆனால், அமெரிக்கர்களுக்கே வேலை, பொருளாதார பாதுகாப்பில் முன்னுரிமை, இழந்த வேலைவாய்ப்புகளை மீண்டும் அமெரிக்க குடிகளுக்கு மீட்டுத் தருவேன் என்ற வாதத்தை முன்வைத்த டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை இனத்தவர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி கண்டார்.
தற்போது அமெரிக்காவின் உலகமயமாக்கக் கொள்கை மற்றும் பல்வேறு கொள்கை முடிவுகளால் வேலைவாய்ப்பின்மை பெருகிவிட்டது. இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சீனா, உற்பத்தித்தித் துறைக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றது. தகவல்தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் இந்தியா வசம் சென்றன. அமெரிக்கர்கள் அதிக ஊதியம் கேட்டு சிக்கல்களை ஏற்படுத்தியதால் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வேறு நாடுகளுக்கு அளித்தன.
தற்போது மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களில் அவர் முன்னிலை வகிப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பென்சில்வேனியாவில் 5.5 சதவீத முன்னிலை மட்டுமே உள்ளது. ஜார்ஜியா மற்றும் ஃப்ளோரிடா ஆகிய முக்கிய மாகாணங்களில் ஃபைடனுக்கு வெறும் 2% முன்னிலை மட்டுமே உள்ளது. சிறு தவறுகள் கூட இந்த மாகாணங்களில் வெற்றி வாய்ப்பை மாற்றி விடும். இந்த மாகாணங்களில் தான் டொனால்ட் ட்ரம்ப் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: தேர்தல் பதற்றத்தில் அமெரிக்கா! வெற்றி பெறப்போவது யார்?