அமேசான் காட்டுத்தீ பல வாரங்களுக்கு மேலாக காட்டை அழித்து வருகின்றது. கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெக்டர் நிலம் தீயினால் நாசமாகியுள்ளது. பல்வேறு மரங்கள், தாவரங்கள், தீயில் அழிந்த நிலையில் விலங்குகளும் பறவைகளும் அதில் உயிரிழந்துள்ளன.
காட்டுத் தீயை அணைப்பதற்காக அதிபர் ஜெய்ர் போல்சனரோ பிறப்பித்த உத்தரவின் பேரில் ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இவர்கள் நடத்திய விசாரணையில் 63 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு 87 லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
‘அமேசான் எரிகிறது... காலநிலை மாறுகிறது... மக்களிடம் எந்த தாக்கமும் இல்லை!'
உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான், பூமிக்கு 20 விழுக்காடு பிராணவாயுவை அளித்துவருகிறது. இதன் காரணமாக இது 'பூமியின் நுரையீரல்' என்றும் அழைக்கப்படுகிறது. உலக வெப்பமாதலைத் தடுப்பதில் இந்த மழைக்காடுகள் முக்கிய பங்கு வகித்துவருவது குறிப்பிடத்தக்கது.