அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்லவுள்ள பிரதமர் மோடி, வரும் 22ஆம் தேதி ஹவுஸ்டன் நகரில் நடைபெறவுள்ள 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப்புடன் கலந்துகொண்டு அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் உரையாற்றவுள்ளார்.
இந்நிலையில், இமெல்டா என்று பெயரிடப்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஹவுஸ்டன் நகரில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில மணி நேரம் இந்நகரில் விமானச் சேவை நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து வானிலை கணிப்பு மையம் (Weather Prediction Centre) வெளியிட்ட அறிக்கையில், 'வெள்ளிக்கிழமை (உள்ளூர் நேரப்படி) இந்த மழையானது தொடரும். உயிருக்கு ஆபத்தான வெள்ளங்கள் ஏற்படக்கூடலாம்' எனக் கூறப்பட்டுள்ளது.