சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இதில் உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிக அளவு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 37 லட்சத்து 21ஆயிரத்து 544 பேரும், பிரேசிலில் 20 லட்சத்து 21ஆயிரத்து 834 பேரும், இந்தியாவில் ஒரு லட்சத்து 36ஆயிரத்து 497 பேரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கெய்லீ மெக்னானி, “அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரிசோதனைகள் 4.2 கோடிக்கும் அதிகமாக செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அமெரிக்காவில்தான் இவ்வளவு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில், இந்தியா உள்ளது. இந்தியாவில் 1.2 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையில் நாங்கள் உலக அளவில் முன்னணியில் உள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க...கொஞ்சம் கவனமாக கேளுங்க🤫 உலக எமோஜி 😎 தின ரகசியங்கள் 🤫 அறிவோம்!