ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப் படையினர் கடந்த சில நாள்களுக்கு முன் வெளியேறினர். புதிதாக அதிபராகப் பொறுப்பேற்ற ஜோ பைடன் தலைமையிலான அரசு திட்டமிட்ட நாளுக்கு முன்கூட்டியே படையை விலக்கிக்கொண்டது.
இதன்மூலம் ஆப்கானிஸ்தானில் தாலிபான் மீண்டும் தலைதூக்கிவிடும் என்றும், அமெரிக்கா ஆப்கானிஸ்தான் அரசை கைவிட்டதாகவும் சர்வதேச அரங்கில் குற்றச்சாட்டு நிலவுகிறது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதிலளித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஜோ பைடன் பேசுகையில், "அமெரிக்காவின் அடுத்த தலைமுறையையும் போரில் ஈடுபடுத்த விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானைக் கட்டமைப்பது ஒன்றும் அமெரிக்காவின் கடமையல்ல.
ஆப்கானிஸ்தான் தலைவர்கள் ஒன்றிணைந்து தங்களது நாட்டின் எதிர்காலத்தை தாங்களே கட்டமைக்க வேண்டும்" என்றார்.
கடந்த 15 நாள்களில் ஆப்கானிஸ்தானின் பல பிராந்தியங்களை தாலிபான் அமைப்பினர் தங்களில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இது ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானிக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்!