சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சிப் பிராந்தியமான ஹாங்காங்கில் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடைபெற்றுவருகிறது. ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமையை நீர்த்துப்போகச் செய்யும்விதமாக சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அண்மையில் கொண்டுவந்தது.
ஹாங்காங்கின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும்விதமாக சீனாவின் நடவடிக்கை உள்ளதாக அங்கு கடும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அங்கு ஜனநாயக செயற்பாட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி வெளிநாடுகளுக்கு அடைக்கலம் புகுந்துவருகின்றனர்.
அதன்படி, ஹாங்காங்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக செயற்பாட்டாளருமான சிக்டஸ் பாகியோ லியூங் சுங் அமெரிக்காவில் அடைக்கலம் தேடியுள்ளார். மேலும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைத்திருக்க அமெரிக்கா முன்னெடுப்புகளை மேற்கொண்டு சீனாவுக்கு அழுத்தம் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: அமைதி ஒப்பந்தத்தை மீறும் அமெரிக்கா - ஆப்கான் மீது தாக்குதல்