அமெரிக்காவைச் சேர்ந்தவர் கரேன்மேசன். பறவைகளை புகைப்படம் எடுக்கும் புகைப்படக்கலைஞரான இவர் கடந்த வாரம் ஃபுளோரிடா கடற்கரையில் பறவைகளை படம்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது பிளாக் ஸ்கிம்மர் பறவை ஒன்று தன் குட்டிக்கு உணவு கொடுப்பதை படம்பிடித்துள்ளார்.
பின்னர் அந்தப் படத்தை பார்த்த போது தாய் பறவை எடுத்து வந்தது உணவில்லை, மீதமாக வீசப்பட்ட உணவுத் துண்டு எனத் தெரியவந்துள்ளது. இந்தப் படத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர் புகைப்பிடித்தால் மீதமிருக்கும் சிகரெட் துண்டை கீழே வீசிச் செல்லாதீர்கள் எனக் கூறியுள்ளார்.
அவரது இந்தப் புகைப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களின் புகைப்பழக்கம் பறவைகளையும் பாதிக்கிறது என்பதை உணர்த்துகிறது இந்த புகைப்படம்.