ETV Bharat / international

2019 உலக நிகழ்வுகள் ஒரு அலசல்

author img

By

Published : Jan 1, 2020, 12:01 AM IST

Updated : Jan 2, 2020, 11:13 AM IST

உலக வல்லரசு நாடு எதிர்கொள்ளவிருக்கும் பொதுத்தேர்தல், பின்லாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் மரின், உலகை காக்க வந்த கிரெட்டா தன்பெர்க், குர்துகளை நட்டாற்றில் விட்டுச்சென்ற அமெரிக்க பாதுகாப்புப் படை, தீக்கிரையான பழம்பெரும் தேவாலயம், பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், முடிதுறந்த மன்னர், வெளிச்சத்துக்கு வந்த இருள், ஈஸ்டர் தாக்குதல், தயங்கி நிற்கும் சீனா என 2019ஆம் ஆண்டு நடந்த சில முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக இங்கு காணலாம்.

2019 world
2019 world

1) சர்ச்சைப் பேரரசனுக்கு செக்!

அடாவாடி பேச்சாலும் ட்வீட்டுகளாலும் அடிக்கடி சர்ச்சைகளுக்குள்ளாகும் அமெரிக்கா அதிபர் ட்ரம்பை பதவிநீக்கம் செய்ய அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் (கீழ் சபை) இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

2020 அதிபர் தேர்தலில் தனக்கு எதிராகக் களமிறங்கவிருக்கும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், அவரது மகன் ஹண்டார் பிடன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தூசித்தட்டி விசாரிக்கும்படி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸொலென்ஸ்கிக்கு ட்ரம்ப் அழுத்தம் கொடுத்தாக அடையாளம் தெரியாதவர் புகாரெழுப்ப, அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஜனநாயகக் கட்சியினர் அதிபருக்கு கிறிஸ்துமஸ் பரிசை (பதவி நீக்க தீர்மானம்) வழங்கினார்கள்.

அதிபர் ட்ர்ம்ப்
அதிபர் ட்ர்ம்ப்

ட்ரம்பின் குடியுரசுக் கட்சிக்கு செனட் சபையில் (மேல் சபை) பெரும்பான்மை இருப்பதால் அவர் மீதான பதவிநீக்கத் தீர்மானங்கள் தோற்கடிக்கப்பட்டு அவரது பதவிக்கு ஆபத்தில்லை என்றபோதிலும், ஒழுக்கநெறித் தவறிய அதிபர் என்ற அவப்பெயருடன் ட்ரம்ப் 2020 அதிபர் தேர்தலை சந்திக்க வேண்டியதிருக்கும்.

2) வரலாறு படைத்த கிரேட்டா

ஐந்தடிக்கும் குறைவான உயரம், குழந்தைகளுக்கே உரித்தான முகம், மழலை மாறாத குரல் என மிகச் சாதாரண 16 வயது பெண்ணாக இருக்கும் கிரேட்டா தன்பெர்க் பல சாதனைகளுக்குச் சொந்தக்கார். கடந்த ஓராண்டாக காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுப் போராட்டத்தில் கலந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

கிரேட்டா தர்பெர்க்
கிரேட்டா தர்பெர்க்

சுவீடனில் 2003ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிறந்த கிரேட்டாவுக்கு குழந்தைகளுக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு தனியாகப் போராட்டத்தை தொடங்கிய கிரேட்டா, செப்டம்பரில் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் உலக வல்லரசு தலைவர்களை நோக்கி குரலை உயர்த்தியது புதிய வரலாறு.

3) வாகைசூடிய பிரெக்ஸிட் கதாநாயகன்

'பிரெக்ஸிட்' என்ற தாரக மந்திரத்தைப் போர்வாளாகக் கொண்டு அறுதிப் பெரும்பான்மையுடன் பிரிட்டனில் ஆட்சியமைத்துள்ளார் போரிஸ் ஜான்சன். கன்னித்தீவு தொடர்கதைபோல நீண்டுகொண்டே செல்லும் பிரெக்ஸிட் இழுபறியால் சலிப்புத்தட்டிய பிரிட்டன் மக்கள், டிசம்பர் 12ஆம் தேதி பிரெக்ஸிட் கதாநாயகனிடம் ஆட்சியை ஒப்படைத்தனர்.

போரிஸின் கன்சர்வேட்டிவ் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 365 தொகுதிகளைக் கைப்பற்றி வரலாற்றுச்சாதனை படைத்தது. இது 2020 ஜனவரி 31ஆம் தேதி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு நிரந்தரமாக வெளியேறுவதை உறுதிசெய்துள்ளது. அதேவேளையில் ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கு வெறும் 203 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.

பொதுத்தேர்தலில் வென்ற பின்னர் மக்களைச் சந்திக்கும் போரிஸ்

தொழிலாளர் கட்சியின் எஃகு கோட்டைகள்கூட கன்சர்வேட்டிவ் வசம் உள்ளன. அதேபோல ஸ்காட்லாந்தை தனிநாடாக்க வலியுறுத்திவரும் ஸ்காட்லாந்து தேசியவாத கட்சி ஸ்காட்லாந்தில் மற்ற கட்சிகளை ஓரம்கட்டிவிட்டு 48 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

சுருக்கமாக நடந்து முடிந்த தேர்தல் பிரிட்டன் அரசியல் வரைபடத்தை மாற்றியமைத்துள்ளது. போரிஸ் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கலாம், ஆனாலும் இனிவரும் காலங்களில் அவர் சந்திக்கப் போகும் சவால்கள் ஏராளம்.

4) தீயில் கருகிய அமேசான்

உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகளில், மே மாதம் பற்றிய தீ செப்டம்பர் வரை தொடர்ந்தது. அதன் விளைவு... அரியவகை உயிரினங்கள், மூலிகைகள் சாம்பலாகின. உலக நாடுகள் கதிகலங்கின.

வளர்ச்சி என்ற பெயரில் ஏற்கனவே 20 விழுக்காடு அமேசான் காடுகள் அழிக்கப்பட்ட நிலையில் இந்தத் தீ விபத்து மற்றொரு பேரிடி! அமேசான் மழைக்காடுகள் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இது ஒரு நாடாக இருந்திருந்தால், பரப்பளவில் உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய நாடாகத் திகழும்.

அமேசான் காட்டுத் தீ
அமேசான் காட்டுத் தீ

அமேசான் காடுகள் பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈகுவடார், பொலிவியா, கயானா, பிரெஞ்சு கயானா உள்ளிட்ட ஒன்பது நாடுகளிலும் பரவியுள்ளன.

5) முடி துறந்த மன்னர்

ஜப்பன் மன்னர் அஹிட்டோ (86) உடல் நலக்குறைவு காரணமாக தனது அரசப் பதவியை ஏப்ரல் 30ஆம் தேதி துறந்தார். இவர் ஏறக்குறைய மூன்று தசாப்தங்கள் மன்னராக அரியணையை அலங்கரித்தவர். அஹிட்டோவுக்கு பின்னர் அவரது மகன் நருஹிட்டோ மே மாதம் ஒன்றாம் தேதி அரியணை ஏறினார்.

பேரரசர் அகிஹிட்டோ
பேரரசர் அகிஹிட்டோ

ஜப்பானிய மக்களை அன்பால் கட்டிப் போட்டவர் என்ற பெருமை அஹிட்டோவுக்கு உண்டு. இதுஒருபுறமிருக்க அஹிட்டோவின் பேத்தி அரச குடும்பத்தைச் சாராத இளைஞரைத் திருமணம் செய்துகொள்ள ஏதுவாக அஹிட்டோ அரசப் பதவியைத் துறந்துவிட்டார் என்ற கருத்தும் நிலவுகிறது.

6) அரியணை ஏறிய பெண் சிங்கம்

'மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்று பாடிய கவிமணியின் வாக்கிற்கு ஐரோப்பிய நாடான பின்லாந்து வடிவம் கொடுத்துள்ளது. ஆம். 34 வயதான சனா மரின் புதிய பிரதமராக டிசம்பர் 10ஆம் தேதி அந்நாட்டின் மூன்றாவது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். உலகிலேயே இளம் வயது பிரதமர் இவர்தான். இவரின் அமைச்சரவையை 12 பெண்கள் அலங்கரிக்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

பின்லாந்து பிரதமர் சனா மரின்
பின்லாந்து பிரதமர் சனா மரின்

7) பாதாளத்தில் முடிந்த பாக்தாதி

அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்குப் பிறகு, உலகத்தையே அச்சுறுத்தலின் பிடியில் வைத்திருந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் (கலிஃப்) அபுபக்கர் அல் பாக்தாதி, அக்டோபர் 27ஆம் தேதி அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.

'இஸ்லாமிய நாடுகள்' என்ற நாட்டை உருவாக்கும் நோக்கத்தில் ஐஎஸ் அமைப்பு 2014ஆம் ஆண்டு பெரும் பயங்கரவாத சக்தியாக தலைதூக்கியது. ஓரிரு ஆண்டுகளில் ஈராக், சிரியா நாடுகளின் பெரும் பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டுவந்து அங்கு அடிப்படைவாத ஆட்சியை நடத்திவந்தது.

எண்ணெய் வளச் சுரண்டல், பணப் பறிப்பு, கடத்தல் எனப் பல குற்றச்செயல்களைப்புரிந்து அதில் வந்த பல மில்லியன் டாலர்கள் வைத்து உலகளவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஐஎஸ் ஈடுபட்டது. இதற்கெல்லாம் மூளையாகச் செயல்பட்ட பாக்தாதியை சல்லடைப் போட்டு தேடிய அமெரிக்க ராணுவம், அவர் வடக்கு சிரியாவில் உள்ள கிராமத்தில் பதுங்கியிருப்பதைக் கண்டறிந்தது.

பாக்தாதி
பாக்தாதி

சம்பவத்தன்று, பாக்தாதில் கோட்டைக்குள் புகுந்த அமெரிக்க சிறப்புப் படையினர் அங்கிருந்தவர்களைச் சரமாரியாக வேட்டையாடத் தொடங்கினர். இதையறிந்து பதுங்குக்குழி வழியாக தப்பியோட முயன்ற பாத்தாதி ஒருகட்டத்தில் குழிக்குள்ளேயே வசமாகச் சிக்கிக் கொண்டார்.

முடிவு நெருக்கிவிட்டதை உணர்ந்த பாக்தாதி மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டார். பாக்தாதி இறந்துவிட்டாலும் பல்வேறு நாடுகளில் ஐ.எஸ். தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

8) மஞ்சள் அங்கி போராட்டம்

ஃபிரான்ஸ் நாட்டை உலுக்கும் மஞ்சள் அங்கி போராட்டம் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. இந்தப் போராட்டக்குழுக்கள் தற்போதும் ஃபிரான்சின் முக்கிய நகரங்களில் கூடி, மஞ்சள் அங்கி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பிரான்ஸை கதிகலங்க வைத்த மஞ்சல் அங்கி போராட்டம்

பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு எதிராகத் தொடங்கிய இப்போராட்டம், காலப்போக்கில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மாறியது. ஆட்சியாளர்களின் அக்னிப் பார்வையால், போராட்டக்காரர்கள் லத்தி அடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சுகளுக்கு ஆளாகின்றனர். ஆயினும் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 1.5 மில்லியன் யூரோ மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன.

9) வெளிச்சத்துக்கு வந்த இருள்
இதுவரை விண்ணியல் ஆய்வாளர்களின் கற்பனைக்கும் எட்டாத கருந்துளை, இவிட் ஹாரிஸோன் என்ற தொலைநோக்கி மூலம் முதன்முறையாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து சுமார் 55 லட்சம் ஒளியாண்டுகள் அப்பால் உள்ளது. மேசிரியர் 87 என்ற விண்மீனின் மையத்தில் இந்தக் கருந்துளையானது அமைந்துள்ளது.

கருந்துளை
கருந்துளை

சூரியனைவிட 6.5 லட்சம் கோடி அடர்த்தியுடைய இந்தக் கருந்துளை, அதனைக் கடந்து செல்லும் அனைத்து பொருள்களையும் விழுங்கும் அசுரத்தனமான ஈர்ப்பு விசை கொண்டது. ஒலியால்கூட இந்தக் கருந்துளையிடமிருந்து தப்பிக்க முடியாது.

10) தீக்கிரையான தேவாலயம்

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நோர்ட-தோம் தேவாலயம் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது காதிக் என்னும் ஒருவகை ஐரோப்பிய கட்டடக் கலையால் எழுப்பப்பட்டது. ஓங்கிஉயர்ந்த கோபுரங்களும் (115 அடி) கண்ணாடிகளும் அழகிய வேலைபாடுகளுடன் கதவுகளும் பார்க்க பிரமிப்பாக இருக்கும். இந்த அமைப்பு ஒருகணம் நம்மை கடந்த காலத்துக்கு அழைத்துச் செல்லும்.

தீர்கிரையாகும் நோர்ட-தோம் தேவாலயம்
தீர்கிரையாகும் நோர்ட-தோம் தேவாலயம்

இந்த தேவாலயம் ஏப்ரல் 16ஆம் தேதி தீக்கிரையானது. நல்வாய்ப்பாக தேவாலயத்தின் முக்கிய இரு மணிக் கூண்டுகள் தீயிலிருந்து பாதுகாக்கப்பட்டன. தற்போது தேவாலயத்தை புனரமைக்கும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுவருகிறது. அதற்காக சர்வதேச நிதி உதவியும் கோரப்பட்டுள்ளது.

11) ஈஸ்டர் தாக்குதலும், ராஜபக்ச எழுச்சியும்

அன்றைய தினம் (ஏப்ரல் 21ஆம் தேதி) ஈஸ்டர் பண்டிகை என்பதால் கிறிஸ்தவ சமூக மக்கள் புத்தாடை அணிந்து, இயேசு பிரானின் வருகைக்காக (மறுபிறப்பு) தேவாலயத்தில் அமைதியான பிரார்த்தனையில் கூடியிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் பயங்கர வெடிச்சத்தம். அடுத்த நொடி சிதறிக் கிடந்த மனித உடல்கள், ஆறாய் ஓடிய ரத்தம் என தேவாலயம் எங்கும் மரண ஓலம். மீண்டும் ஒருமுறை இலங்கை அமைதியை இழந்து நின்றது!

குண்டுவெடிப்பு நடந்த தேவாலையம்
குண்டுவெடிப்பு நடந்த தேவாலையம்

மக்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் அருகருகே அடுத்தடுத்த தாக்குதல்கள். அதில் நட்சத்திர விடுதிகளும் தப்பவில்லை. ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதல்களில் 259 பேர் உயிரிழந்தனர். அதில் 45 பேர் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்.

உலகெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தத் தற்கொலைப்படை தாக்குதல், இலங்கையில் உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனை சாதகமாக்கிய ராஜபக்ச சகோதரர்கள் மீண்டும் எழுச்சிப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர்.

12) சீனாவை மிரட்டிய சுயாட்சிப் போராட்டம்

மாடமாளிகைகள், விண்ணைமுட்டும் கோபுரங்கள் என வளர்ச்சிக்குப் பெயர்போன ஹாங்காங் இந்தாண்டு போர்க்களமாய் காட்சியளித்தது. ஹாங்காங் கைதிகளை சீனாவுக்கு நாடுகடத்தும், 'கைதிகள் பரிமாற்றச் சட்ட மசோதா'வுக்கு எதிராக அமைதியாக தொடங்கிய போராட்டம், பூதாகரமாக வெடித்து சீன அரசையே ஆட்டம் காணவைக்கும் என யாரும் கடுகளவும்கூட நினைத்திலர்.

மாணவ, மாணவியர் உள்பட லட்சக்கணக்கான ஹாங்காங்வாசிகள் வீதிகளில் இறங்கி சுயாட்சி, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும், சீன அரசின் அதிகாரப் பசியை எதிர்த்தும் போராடினார்கள்.

ஜூன் மாதம் ஆரம்பித்த இந்தப் போராட்டம் பல வன்முறை, கலவரச் சம்பவங்களைக் கடந்தும் ஓயாமல் இன்றளவும் நடைபெற்றுவருகின்றது. ஏற்கனவே, அமெரிக்காவுடனான வர்த்தப்போரில் சிக்கித்தவிக்கும் சீனாவுக்கு ஹாங்காங் போராட்டம் கூடுதல் தலைவலி.

ஹாங்காங் போராட்டம்
ஹாங்காங் போராட்டம்

1989ஆம் ஆண்டு தியான்மர் சதுக்கம் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கான மாணவர்களைக் கொத்துக்கொத்தாகச் சுட்டுக்கொலை செய்ய துணிந்த சீன அரசு, உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்துவருவதால் ஹாங்காங் போராட்டக்காரர்களை ஒன்றும் செய்யமுடியாமல் விழிபிதுங்கிநிற்கிறது.

சீனா அதன் பொறுமையை இழக்குமா? என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். எப்படியிருந்தாலும் எவ்வளவு பெரிய படைகளை வைத்திருந்தாலும் மக்கள் வெகுண்டெழுந்தால் ஆட்சியாளர்கள் அடங்கித்தான் போக வேண்டும்.

14) எலியும் பூனையும் சந்திப்பு

உலக அரங்கில் எலியும் பூனையுமாக அடித்துக் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னும் வியட்நாம் தலைநகர் ஹனாயில் பிப்ரவரி மாதம் சந்தித்துப் பேசினர். இதில் எவ்வித உடன்பாடும் எட்டாத நிலையில் இருவரும் வடகொரிய எல்லையில் மீண்டும் ஜூன் மாதத்தில் சந்தித்துக்கொண்டனர்.

அதிபர் ட்ரம்ப், கிம் ஜாங் உன் கொரியா எல்லையில் சந்தத போது

ஒரே ஆண்டில் இரண்டுமுறை தலைவர்கள் சந்தித்தபோதிலும் இருநாட்டு உறவுகளும் திரிசங்கு சொர்க்கமாகவே இருக்கிறது. ஒருவர் சர்ச்சைகளின் அதிபராகவும் மற்றொருவர் அடாவடி அதிபராகவும் வலம்வருகிறார்.

15) ஆடுகளை வேட்டையாடிய ஓநாய்கள்

'ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை வென்றுவிட்டோம் - இனி எங்களுக்கு இங்கு வேலையில்லை' எனக் கூறி வடகிழக்கு சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற, அங்கு களமிறங்கிய துருக்கிப் படை குர்து இன மக்களை வேட்டையாடியது.

ஈரானை பூர்வீகமாகக் கொண்ட குர்து இன மக்கள் துருக்கி, சிரியா, ஈரான், ஈராக், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வசித்துவருகின்றனர். 2014ஆம் ஆண்டு வாக்கில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு சிரியாவைக் கைப்பற்றியபோது, அங்குள்ள குர்து இன மக்களை தாக்கிவந்தது.

இந்தச் சூழலில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை ஒழித்துக்கட்டும் முனைப்போடு சிரியாவில் களமிறங்கிய அமெரிக்கப் படையினர், குர்து இனப் போராளிகளுடன் கைகோத்து போரிட்டனர். ஆனால், துருக்கியைப் பொறுத்தவரை குர்து போராளிகள் பயங்கரவாதிகள்.

குர்து பேராளிகள்
குர்து பேராளிகள்

இதனால் அவர்களை அழிக்கத் துடித்துக்கொண்டிருந்த துருக்கி, அமெரிக்கா வெளியேற அந்தப் பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு குர்துகள் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்தியது.

இதனால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,'குர்துகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றால் துருக்கியின் பொருளாதாரத்தை உருத்தெரியாமல் அழித்துவிடுவேன்' என மிரட்டும் தொனியில் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

இதனை கிஞ்சித்தும் மதிக்காத துருக்கி, குர்துகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி அவர்களை அடித்துவிரட்டியது. குர்துகளின் பரம எதிரியான சிரிய ராணுவப் படையினர் அவர்களுடன் சேர்ந்து துருக்கியை எதிர்கொண்டன. ஆம், சிரியா போரில் இதில் மற்றுமொரு திருப்பம்.

பின், ரஷியாவின் தலையீடு காரணமாக, குர்துகள் மீதான தாக்குதலை துருக்கி நிறுத்திக்கொண்டது. தங்களை துருக்கிகளுக்கு இரையாக்கிய அமெரிக்கர்களை குர்துகள் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.

Intro:Body:

2019 world revine

Conclusion:
Last Updated : Jan 2, 2020, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.