ஜூனாவ்: அலாஸ்கா கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் நிகழவில்லை. உயிர்சேதம், பொருள்சேதம் உள்ளிட்ட எவ்வித இழப்பும் ஏற்படவில்லை.
அலாஸ்கா கடற்கரை அமெரிக்காவில் புகழ்பெற்ற கடற்கரையாகும். இங்கு ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து அமெரிக்க பூகோள ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் கூறுகையில், “1900ஆம் ஆண்டு முதல் 155 மைல் (250 கி.மீ) ஆழத்துக்குள் 7.0 ரிக்டர் அளவுகோல் கொண்ட ஆறு பூகம்பங்கள் இதுவரை ஏற்பட்டுள்ளன. அவற்றில் மிகப்பெரியது 1938 இல் ஏற்பட்டதாகும். இது ரிக்டர் அளவுக் கோலில் 8.2 ஆக பதிவாகியிருந்தது.
-
Tsunami warning issued as 7.4 earthquake hits off Alaska: National Oceanic and Atmospheric Administration. #UnitedStates pic.twitter.com/B2WHXH08g9
— ANI (@ANI) July 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tsunami warning issued as 7.4 earthquake hits off Alaska: National Oceanic and Atmospheric Administration. #UnitedStates pic.twitter.com/B2WHXH08g9
— ANI (@ANI) July 22, 2020Tsunami warning issued as 7.4 earthquake hits off Alaska: National Oceanic and Atmospheric Administration. #UnitedStates pic.twitter.com/B2WHXH08g9
— ANI (@ANI) July 22, 2020
இதையும் படிங்க: குழாய் மூலம் குடிநீர்: மெகா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி