மானிடத்தையே அச்சுறுத்திவரும் கோவிட்-19 வைரஸ் வன விலங்குகளையும் விட்டுவைப்பது போலத் தெரியவில்லை.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள புரான்ஸ் உயிரியல் பூங்காவில், நாடிய என்ற மலாயன் புலிக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதாக, அமெரிக்காவின் வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம், இம்மாதம் 5ஆம் தேதி அறிவித்திருந்தது.
இந்நிலையில், நாடியாவின் சகோதரியான அஸுல், இரண்டு அமுல் வகை புலிகள், மூன்று ஆப்ரிக்க சிங்கங்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தற்போது புரான்ஸ் உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தப் பூங்கா வெளியிட்டிருந்த அறிக்கையில், "மேலும் மூன்று புலிகள், மூன்று சிங்கங்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய்ப் பாதிப்புக்குள்ளான விலங்குகளின் எச்சங்களைப் பரிசோதித்துப் பார்த்ததில், இந்த முடிவுகள் வெளிவந்துள்ளன. இவற்றில் ஒரு சிங்கத்துக்கு மட்டும் அறிகுறிகளே தென்படவில்லை" எனத் தெரிவித்துள்ளது.
புரான்ஸ் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்களிடமிருந்து அவ்விலங்குகளுக்கு நோய்ப் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க : கரோனா அச்சுறுத்தல் : ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிப்பு!