ETV Bharat / international

நார்வேயில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 பேர் உயிரிழப்பு! - கரோனா வைரஸ்

ஒஸ்லோ: நார்வேயில் ஃபைசர் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சில நாள்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 13 இறப்புகள் பக்க விளைவுகள் தொடர்பானவை என்று நியூயார்க் போஸ்ட் மேற்கோள் காட்டியுள்ளது.

நார்வேயில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Jan 16, 2021, 11:46 PM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசிகள் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

நார்வேயில் ஃபைசர் என்ற தடுப்பூசி பொதுமக்களுக்கு உட்செலுத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ஃபைசர் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 23 பேர் நார்வேயில் உயிரிழந்துள்ளனர். இதில், இதில், 13 இறப்புகள் பக்க விளைவுகள் தொடர்பானவை என்று நியூயார்க் போஸ்ட் மேற்கோளிட்டுள்ளது. பக்க விளைவுகளுடன் உயிரிழந்த 13 பேரும் நர்சிங் ஹோம் நோயாளிகள் மற்றும் குறைந்தது 80 வயதுடையவர்கள் ஆவார்.

இதுதொடர்பாக நார்வே மருந்துகள் நிறுவனத்தின் தலைமை மருத்துவர் சிகுர்ட் ஹார்டெமோவை மேற்கோள் காட்டி நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காய்ச்சல் மற்றும் குமட்டல் உள்ளிட்ட தடுப்பூசிக்கான பொதுவான எதிர்வினைகள் "சில பலவீனமான நோயாளிகளுக்கு ஒரு அபாயகரமான விளைவுக்கு காரணமாக இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.

நார்வேயில் கடந்த டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து சுமார் 30 ஆயிரத்தும் மேற்பட்டோருக்கு ஃபைசர் அல்லது மாடர்னா கரோனா வைரஸ் தடுப்பூசி உட்செலுத்தப்பட்டுள்ளது.

பலவீனமான நோயாளிகளுக்கு விதிவிலக்கு அளித்து, யாருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதை மருத்துவர்கள் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். இறந்த 13 பேர் உள்பட மொத்தம் 29 பேர் பக்கவிளைவுகளை சந்தித்ததாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், 21 பெண்கள் மற்றும் 8 ஆண்கள் பக்க விளைவுகளை எதிர்கொண்டதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

சுகாதார அலுவலர்களின் கூற்றுப்படி, நர்சிங் ஹோம் மக்கள் தொகையில் ஒவ்வொரு வாரமும் சுமார் 400 பேர் உயிரிழக்கின்றனர்.

நார்வேயில் இதுவரை 58 ஆயிரத்து 202 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இதுவரை 517 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.