ETV Bharat / international

நைட் கிளப்பில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் உயிரிழப்பு - அமெரிக்கா

கொலம்பியா: தென் கரோலினா கிரீன்வில்லில் உள்ள நைட் கிளப்பில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் 8 பேர் காயமடைந்தும் 2 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

Greenville shootout incident
Greenville shootout incident
author img

By

Published : Jul 6, 2020, 3:45 AM IST

தென் கரோலினா இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர், எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று சட்ட அமலாக்க அலுவலர்கள் லூயிஸ், லெப்டினன்ட் ஜிம்மி போல்ட் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது;'கிரீன்வில் லாவிஷ் லவுஞ்ச் கட்டடத்திலிருந்து அதிகாலை 2 மணிக்கு முன்னதாக ஒரு பெரிய கூட்டம் வெளியே ஓடி வந்துள்ளது. பின்னர், கட்டடத்தின் உள்ளே சென்று பார்த்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

தற்போது வரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். ஆனால் இன்னும் சரிவர அதுகுறித்த விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த துப்பாக்கிச்சூடு எதற்காக நடத்தப்பட்டது, அதற்கு தற்போது வரை என்ன காரணம், யாரால் நடத்தப்பட்டது என்று இதுவரை தெரியவில்லை.

தற்போது பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் நிபந்தனைகளின் காரணமாக உடனடியாக வெளியிடப்படவில்லை. உயிரிழந்தவர்கள் கிரீன்வில்லில் உள்ள பிரிஸ்மா சுகாதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிலர் தனியார் வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த விடுதியில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக இந்தக் கூட்டம் கூடியது. அதுவும் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளனர். அதனால் இது குறித்து தெரியவந்தது.

தென் கரோலினாவின் அப்ஸ்டேட் பிராந்தியத்தில், கிரீன்வில் நகரத்தின் தென்மேற்கே ஐந்து மைல் தொலைவில் இந்த நைட் கிளப் உள்ளது.

தென் கரோலினாவில் கரோனா வைரஸ் வழக்குகள் விரைவாக உயர்ந்துள்ளன. முகக் கவசம் அணிவதை அரசாங்கம் கட்டாயப்படுத்தி இருந்தாலும் சிலர் அதனை சரியாகப் பின்பற்றுவதில்லை.

தற்போது கரோனா தொற்று குறித்து பல கட்டுப்பாடுகள் இருக்கும் வேலையில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடுவதற்கு அரசாங்கம் எப்படி அனுமதி அளித்தது என்று தெரியவில்லை, இதிலிருந்து அந்த கிளப் அரசாங்கத்திடம் விலக்கு பெற்றதா? என்பது குறித்து தெரியவில்லை’ இவ்வாறு தெரிவித்தார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.