ETV Bharat / international

9 ஏமானியரை தூக்கிலிட்ட ஹவுதி குழு- கண்டனம் தெரிவித்த ஐநா, அமெரிக்கா - ஹவுதி குழு

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுவின் மூத்த தலைவர் கொலையில், தொடர்பு இருப்பதாக கூறி ஏமன் நாட்டை சேர்ந்த 9 பேர் தூக்கிலிடப்பட்டதற்கு ஐநா சபை, அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளது.

UN, US, UK condemn Houthis' execution of 9 Yemenis
9 ஏமானியரை தூக்கிலிட்ட ஹவுதி குழு- கண்டனம் தெரிவித்த ஐநா, அமெரிக்கா
author img

By

Published : Sep 20, 2021, 3:26 PM IST

ஏமன்: ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுவிற்கும், சவுதி ஆதரவு பெற்ற அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹவுதி குழுவின் மூத்த தலைவர் சவுதியின் வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய 9 பேரை ஹவுதி குழு தங்களது ஆதரவாளர்கள் முன்னிலையில் நேற்று(செப். 19) தூக்கிலிட்டது. இதனை ஐநா சபை, அமெரிக்கா, பிரிட்டன் கண்டித்துள்ளன.

நியாயமான விசாரணை ஏதுமின்றி ஒன்பது பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் நீதித்துறை இருப்பதால், அவர்களை விமர்சிக்க மக்கள் அச்சப்படுகிறார்கள்" என குறிப்பிட்டுள்ளன.

ஆனால், ஐநாவின் இந்த குற்றச்சாட்டை ஹவுதி கிளர்ச்சிக்குழுவின் தலைவர் முகமது அலி அல்-ஹவுதி மறுத்துள்ளார்.

தூக்கிலிடப்பட்ட ஒன்பது பேர் தவிர்த்து மொத்தம் 54 பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள், அனைவரும் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரச படைகளுக்கு உளவு பார்த்ததாக ஹவுதி குழு தெரிவிக்கிறது.

இந்த சம்பவத்திற்கு பிரிட்டன் தூதரகமும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூக்கிலிடப்பட்ட ஒன்பது பேரில் 17 வயது சிறுவனும் அடங்குவார்.

இதையும் படிங்க: சவுதியின் 20 ராணுவத் தளங்களைக் கைப்பற்றிய ஹவுதிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.