ஐக்கிய நாடுகள் சபை கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23ஆம் தேதி) நிரந்தர போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அடுத்து, லிபிய அரசியல் உரையாடல் மன்றத்தை (எல்பிடிஎஃப்) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மன்றத்தின் முதல் மெய்நிகர் கூட்டம் இன்று நடத்தப்பட்டது. மேலும், மன்றத்தின் நேரடி சந்திப்பு வரும் நவம்பர் 9ஆம் தேதி தொடங்கும் என லிபியா ஐ.நா. ஆதரவு மிஷன் கூறியுள்ளது.
லிபிய அரசியல் உரையாடல் மன்றம் என்பது பெர்லின் மாநாட்டு முடிவுகளால் நிறுவப்பட்ட ஒரு முழுமையான உள்-லிபிய அரசியல் உரையாடலாகும். அவை பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் 2510 (2020) மற்றும் 2542 (2020) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மன்றத்திற்கு அழைக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் புவியியல், இன, அரசியல், பழங்குடி மற்றும் சமூக பிரதிநிதித்துவம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் வெவ்வேறு தொகுதிகளில் இருந்து பேசவுள்ளனர்.
லிபிய அரசியல் உரையாடல் மன்றத்தின் ஒட்டுமொத்த நோக்கம் "லிபியாவின் இறையாண்மையையும், லிபிய நிறுவனங்களின் ஜனநாயக நியாயத்தன்மையையும் மீட்டெடுப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த நிர்வாக கட்டமைப்பில் ஒருமித்த கருத்துகளை கொண்டதாகும் லிபியா ஐ.நா. ஆதரவு மிஷன் கூறுகிறது.
திரிப்போலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கிழக்கை தளமாகக் கொண்ட இணுவமும் ஐ.நா. ஆதரவு அரசாங்கமும் ஒரு வருடத்திற்கும் மேலாக கொடிய ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டிருந்தன. கடந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் இந்த மோதல் முடிவிற்கு வந்தது. இதில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.