அல்ஜீரியாவில் நீண்ட காலமாக பதவி வகித்துவந்த அப்தெல் அஸீஸ் பூத்தஃபிலிக்கா, அந்நாட்டில் வரலாறு காணாத அளவில் நடந்த மக்களின் போராட்டங்களுக்குப் பிறகு ஏப்ரல் 2 ஆம் தேதி பதவி விலகினார்.
இதையடுத்து இடைக்கால ஆதிபராக தேசிய விடுதலை கட்சித் தலைவர் பென்சாலா பதவி ஏற்றார்.ஆனால் இவரும் தேர்தலை அறிவிக்காமல் பதவி காலத்தை நீட்டித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஏராளமான மாணவர்கள் இடைகால அதிபரை சீக்கிரம் பதவி விலகக் கோரியும், முறையான தேர்தலை நடத்தக் கோரியும் நேற்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.