தென் ஆப்ரிக்காவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மே 1ஆம் தேதி தளர்த்துவது குறித்து அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, முகக் கவசம் எப்படி அணிய வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க முற்பட்ட அதிபர் சிரில், அதனை அணிய முடியாமல் நீண்ட நேரம் திக்கித் தடுமாறினார்.
இது தொடர்பான காணொலி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. முகக் கவசம் அணிய தடுமாறிய அதிபர் சிரில் ரமபோசாவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
தென் ஆப்ரிக்காவில் இதுவரை மூன்றாயிரத்து 953 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 75 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : பாகிஸ்தானில் 253 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா!