மெக்ஸிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு நுழையும் மக்களை தடுக்கும் வகையில் எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.அதன்படி, அவர் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியால் தடுப்புச் சுவர் கட்டும் திட்டத்திற்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஒரு பில்லியன் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், மெக்ஸிகோ உடனான தெற்கு எல்லைப்பகுதியை மூடப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இது தொடர்பாக, மெக்ஸிகோவிலிருந்து ரோமிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போப், விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது. பேசிய அவர், " தடுப்புச் சுவர் கட்ட முயற்சிக்கும் நபர்கள், அவர்கள் கட்டும் சுவராலே கைதிகளாக மாற நேரிடும் " என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிற அரசியல்வாதிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் குடியேற்ற கொள்கையை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் போப் பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.