தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுபான கடைகள் கடந்த 46 நாள்களாக மூடப்பட்டுள்ள காரணத்தினால், மக்கள் ஆல்கஹால் போதைக்காக புதிய வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதன்படி, அன்னாசிப் பழம், சர்க்கரை, ஈஸ்ட் (yeast) ஆகியவற்றின் கலவையில் தயாரித்த பானத்தில் ஆல்கஹால் கிக் கிடைப்பதாக உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர்.
இதனால், அந்நாட்டில் தினந்தோறும் 10 ஆயிரம் அன்னாசிப் பழங்கள் விற்பனையான நிலையில், தற்போது லட்சக்கணக்கில் விற்பனையாகி வருகிறது. அன்னாசிப் பழம் விளைச்சல் பற்றாக்குறை காரணமாக, விற்பனை விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள், சொந்தமாகவே பீர் காய்ச்சுவதற்கு அன்னாசிப் பழத்தைப் பயன்படுத்துவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை தென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 500ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவால் மற்ற தொற்றுகள் அதிகரிக்கும் - யுனிசெஃப் கவலை