ETV Bharat / international

பர்கினோ பசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

author img

By

Published : Jun 6, 2021, 9:24 PM IST

பர்கினோ பசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Over 100 civilians killed in Burkina Faso
பர்கினோ பசோவில் பயங்கரவாத தாக்குதல்: 100க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

ஒவ்கடங்கு: பர்கினோ பசோ நாட்டின் யாகோ மகாணத்தில் உள்ள சோல்கான் கிராமத்திற்குள் நேற்று புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த மக்கள்மீது கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்தனர். இந்ததாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய குழுவைப் பிடிக்க தேடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர், தெரிவித்துள்ளார். இதுவரை, இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.

பர்கினோ பசோ நாட்டின் அதிபர், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாத குழுக்களை நாம் இணைந்து வெல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஆண்டனியோ குடரோஸ் கண்டித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், அவர்களது உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் பர்கினோ பசோவில் வளர்ந்து வருகின்றன. பயங்கரவாதிகளின் தாக்குதலில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 1 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களது சொந்த வாழ்விடங்களை விட்டு வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இதைையும் படிங்க: நைஜீரியாவில் ட்விட்டர் வளைதளம் முடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.