ETV Bharat / international

நைஜீரியாவில் அரசுக்கு எதிராகத் தீவிரமடையும் போராட்டம்: 51 பேர் மரணம்!

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், அந்நாட்டு பொதுமக்கள் 51 பேர் உயிரிழந்தனர்.

author img

By

Published : Oct 24, 2020, 8:13 PM IST

Nigerian President
Nigerian President

நைஜீரியா நாட்டில் கடந்த சில நாள்களாக அரசு மற்றும் காவல் துறைக்கு எதிராகப் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் சார்ஸ் (SARS) எனப்படும் திருட்டுத் தடுப்புச் சிறப்புக் காவல் படைக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சார்ஸ் காவல் படையினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி கொலை, கொடுமை, அச்சுறுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அந்நாட்டு மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்நாட்டின் லகோஸ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பலர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் அந்நாட்டு அதிபர் முகமது புஹாரி மௌனம் கலைத்துள்ளார். இதுவரை வன்முறை காரணமாக 51 பொதுமக்கள், 11 காவல் துறையினர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த அவர், வன்முறையை கைவிடக்கோரி போராட்டக்காரர்களுக்கு கோரிக்கைவைத்துள்ளார். மேலும், வன்முறைக்குப் பாதுகாப்புப் படையினர் கைக்கட்டி இருக்கமாட்டார்கள் எனவும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: டிவி விளம்பரச் சந்தைக்கு அடித்த லாட்டரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.