நைஜீரியா நாட்டுத் தலைநகரான அபுஜாவிலிருந்து புறப்பட்ட ராணுவ விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது நடுவானில் விமானத்தின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, விமானத்தை விமானி மீண்டும் அபுஜா விமான நிலையத்திற்குத் திருப்பினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளாகி எரிந்த சாம்பலானது. இதில் விமானத்தில் பயணித்த ஏழு பேர் உயிரிழந்தனர்.
இதனை நைஜீரியா நாட்டு விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாதி ஷரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ராணுவத்தின் விசாரணையை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றுள்ளார்.
இதையும் படிங்க...ஆஸ்திரேலியாவில் முதல் நபராக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்