ETV Bharat / international

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஆப்பிரிக்க நாடுகள் செவிசாய்க்க வேண்டும் - ஐநா

வாஷிங்டன் : கோவிட்-19 பெருந்தொற்றை கருத்தில் கொண்டு உள்நாட்டுப் போர்களை நிறுத்துமாறு ஐநா விடுத்துள்ள அழைப்புக்கு, ஆப்பிரிக்க நாடுகள் செவிசாய்க்க வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

UN General Secretary
UN General Secretary
author img

By

Published : May 27, 2020, 12:14 PM IST

Updated : May 27, 2020, 2:41 PM IST

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தொடக்க தினத்தை (மே 22) முன்னிட்டு ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உரையாற்றினார்.

அப்போது, "ஆப்பிரிக்க ஒன்றியத்தின் செயல் திட்டம் 2063இன் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals) அடையும் திட்டங்களுக்கு கோவிட்-19 பெருந்தொற்று இடையூறாக அமைந்துள்ளது. இந்த நேரத்தில், சர்வதேச நாடுகளிலிருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஆப்பிரிக்க ஒன்றியம் பணிக்குழு ஒன்றையும், சிறப்புத் தூதர்களையும் நியமித்துள்ளது.

கேமரூன், சூடான், தென் சூடான் ஆகிய நாடுகளில் உள்ள ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர் குழுவினர், ஐநாவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒருமனதாக பின்பற்றி வருகின்றனர். இதற்கு ஆப்பிரிக்க அமைப்புகளும் செவிசாய்க்க வேண்டும். இந்தாண்டு 20 ஆப்பிரிக்க நாடுகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அமைதியான முறையில் நடப்பதை ஆப்பிரிக்க நாடுகள் உறுதிசெய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க : 'கரோனாவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த வேண்டாம்' - உலக சுகாதார அமைப்பு

Last Updated : May 27, 2020, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.