அல்ஜீர்ஸ்: இந்திய கடற்படையின் போர் கப்பல் ஐஎன்எஸ் தபார் ஐரோப்பா, ஆப்பிரிக்கா நாடுகளில், நட்புறைவை பேணும் வகையிலான கடல்சார் கூட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டுவருகிறது. அந்த வகையில், இந்தியா-அல்ஜீரியா நாடுகள் தங்களது முதல் கடல்சார் கூட்டுப் பயிற்சியில் ஆகஸ்ட் 29ஆம் தேதி ஈடுபட்டன.
இந்தப் பயிற்சியில் அல்ஜீரியாவின் போர் கப்பலான எஸ்ஸட்ஜெர் உடன் ஐஎன்எஸ் தபார் பயிற்சி மேற்கொண்டது. இந்தப் பயிற்சி அல்ஜீரியக் கடற்பகுதியில் நடைபெற்றது. இதில், ஒருங்கிணைந்த திட்ட நடவடிக்கை, தொலைத்தொடர்பு நடைமுறைகள், பன்முகத் தன்மை தாக்குதல்கள், மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் இருதரப்பு கடற்படைகளால் பின்பற்றப்படும் இயக்க முறைகள், தொழில்நுட்பங்கள் குறித்தும், மேம்பட்ட இயங்கு தன்மை குறித்தும் இருதரப்புக் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பயணம் மேற்கொண்டுள்ள தபார் போர் கப்பல் செப்டம்பர் வரை ஐரோப்பா, ஆப்பிரிக்கா நாடுகளில் கடல்சார் பயிற்சிகளில் கலந்துகொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராணுவப் பயிற்சியில் கவனத்தை ஈர்த்த ஜலாஸ்வா போர்க்கப்பல்