நம்பியா நாட்டில் ஒமருரு பகுதியில் எரிண்டி ப்ரைவேட் கேம் ரிசர்வ் உள்ளது. இங்கு புகைப்படக் கலைஞர் குயின்டஸ் ஸ்ட்ராஸ் சஃபாரியில் பயணித்து கொண்டிருக்கும்போது, பிறந்த சிறிது நாள்களான குட்டி நீர்யானை அதன் தாயுடன் விளையாடுவதைக் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென்று குட்டியை நோக்கி யானை ஒன்று வருவதைப் பார்த்தார். யானையின் பெரிய உருவத்தைக் கண்டு பயந்த குட்டி நீர்யானை கூச்சலிடத் தொடங்கியது. குட்டியின் அலறல் சத்தத்தைக் கண்டு வேகமாக ஒடி வந்த நீர்யானை, யானையை எதிர்த்து சண்டையிட்டது. அப்போது நீர்யானை தனது குட்டியையும் அரவணைத்துக் கொண்டு, தனது கூர்மையான பற்களால் யானையின் தும்பிக்கையைக் கடித்ததில், யானைக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர், சிறிது நேரத்தில் யானை சென்றவுடன் நிலைமை கட்டுபாட்டுக்குள் வந்தது. பின்னர் தாய் நீர்யானை தனது குட்டியுடன் மகிழ்ச்சியாக அப்பகுதியிலிருந்து புறப்பட்டது. இந்நிகழ்வை குயின்டஸ் தொடர்ந்து தனது கேமராவில் புகைப்படம் எடுத்தார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இகையும் படிங்க: கண் முன்னே காணாமல்போகும் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி