கரோனா வைரஸ் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை ஆறு கோடியே 74 லட்சத்து 02 ஆயிரத்து 219க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 லட்சத்து 41 ஆயிரத்து 897 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கியது, கரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனாவில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவால் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை ஆறு கோடியே 74 லட்சத்து 02 ஆயிரத்து 219க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 41 ஆயிரத்து 897 பேராக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் இதுவரை நான்கு கோடியே 65 லட்சத்து 89 ஆயிரத்து 492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 32 ஆயிரத்து 981 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 96 லட்சத்து 77 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது. மொத்த கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 573. இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டுக் குணமடைந்தோர் எண்ணிக்கை 91 லட்சத்து 39 ஆயிரத்து 901 ஆக இருக்கிறது.