ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா வனப்பகுதியில் யானைகளை வேட்டையாடியவர்கள் அதன் தந்தத்தை எடுத்துக்கொண்டபின் உடலில் விஷத்தை தடவிவிட்டுச் சென்றுள்ளனர். யானையின் உடலைத் தின்றபின் வானத்தில் பறந்த 500-க்கும் மேற்பட்ட கழுகுகள் சில நிமிடங்களிலேயே கொத்துக் கொத்தாக கீழே விழுந்து இறந்தன. இறந்த கழுகுகளில் சுமார் 300 கழுகுகள் பாதுகாக்கப்படும் பட்டியலில் உள்ள வகையைச் சேர்ந்தது என்பது கூடுதல் தகவலாகும்.
இறந்து கிடந்த கழுகுகளின் உடல்களைக் கைப்பற்றிய அந்நாட்டு வனத்துறையினர் அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விஷம் வைத்ததற்கான காரணம்:
பிணம்தின்னும் (பாறு) கழுகு இனங்கள் வனப்பகுதியில் விலங்குகள் வேட்டையாடப்படும்போது வானத்தின் உயரே பறந்து வட்டமடிக்கும். இதை வைத்து வனத்துறையினர் வேட்டையாடுபவர்களை எளிதில் பிடித்து நடவடிக்கை எடுத்து வந்தனர். இதையறிந்த கடத்தல்காரர்கள் கழுகுகளுக்கு விஷம் வைத்து கொன்றுள்ளனர்.