மார்ச், ஏப்ரல் மாதங்களில் கரோனா பெருந்தொற்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாகப் பரவிவந்த நிலையில், தற்போது ஆப்பிரிக்க நாடுகளிலும் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. முன்னேறிய நாடுகளே நோய்த்தொற்றைச் சமாளிப்பதில் கடும் சவால்களைச் சந்தித்துவரும் வேளையில், சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் முறையாக இல்லாத ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்து கடினமானதாகக் கருதப்படுகிறது.
ஆப்பிரிக்காவின் கரோனா நிலவரம் குறித்து உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை பெரும் கவலையளிப்பதாக உள்ளது. அந்த அறிக்கையின்படி, ஆப்பிரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
குறிப்பாக, பத்துக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில்தான் கரோனா பரவலின் வேகம் தீவிரமாக உள்ளது. அங்கு முறையான பரிசோதனைக் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை இல்லை என்பதும் கவலை அளிப்பதாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'எங்க சேவையை நீங்க பயன்படுத்தக் கூடாது' -காவல் துறைக்கு தடைபோட்ட அமேசான்!