கரோனா வைரஸ் எனப்படும் கோவிட் - 19 வைரஸ் பாதிப்பானது இதுவரை உலகம் சந்தித்திடாத பேரிடராக உருவெடுத்துள்ளது. உலகில் அனைத்து பகுதிகளிலும் தடம் பதித்த கரோனா வைரஸ் இதுவரை சுமார் 21 லட்சம் பேரை பாதித்துள்ள நிலையில், இந்த வைரஸ் காரணமாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் 15 நாடுகள் மட்டும் தப்பி பிழைத்துள்ளன. அவற்றின் விவரம் இதோ...
ஆசிய கண்டம்
ஆசியாவில் தென் கொரியா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் தற்போது ஒரு கரோனா பாதிப்பு கூட இல்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால் வட கொரியாவின் அண்டை நாடுகளாக நோய் தீவிரம் அதிகமுள்ள சீனா, தென் கொரியா, ரஷ்யா ஆகியவை உள்ளன.
ஆப்ரிக்கா
ஆப்ரிக்காவில் காம்ரோஸ் மற்றும் லிசோதோ ஆகிய நாடுகளில் தற்போது ஒரு கரோனா பாதிப்பு கூட இல்லை. காம்ரோஸ் இரு தீவு தேசம் என்பது அந்நாட்டிற்கு ஒரு சாதகமான அம்சத்தை தந்துள்ளது. அதேபோல் லிசோதோவும் ஆரம்பத்திலேயே பாதிப்பை அறிந்து லாக்டவுன் அறிவித்ததால் அங்கு கரோனா பாதிப்பு இல்லை.
ஓசியானா தீவு நாடுகள்
ஓசியானா எனப்படும் பசிபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடலில் உள்ள குட்டித் தீவு நாடுகள் எட்டில் தற்போது கரோனா பாதிப்பு இல்லை. கிரிபாதி, துவாலு, டோங்கா, சமோவா, மார்ஷல் தீவு, சாலமான் தீவு, நவுரு, பாலாவு, வனுவாது, மைக்ரோனேசியா ஆகியவைதான் இந்த தீவு நாடுகளின் பெயர்கள். இந்த எட்டு நாடுகளின் மொத்த மக்கள் தொகையும் சேர்த்து 7 லட்சத்திற்கு குறைவாகவே உள்ளன.
இதையும் படிங்க: விவசாயிகளின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய கரோனா