கடந்த இரு மாதங்களில் கரோனா பெருந்தொற்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாகப் பரவிவந்த நிலையில், தற்போது ஆப்பிரிக்க நாடுகளிலும் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் கரோனா நிலவரம் குறித்து ஆப்ரிக்க நோய் தடுப்பு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ஆப்பிரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதிகப்பட்சமாக தென்னாப்பிரிக்காவில் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், அதற்கு அடுத்தபடியாக எகிப்தில் 53 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னேறிய நாடுகளே நோய்த்தொற்றைச் சமாளிப்பதில் கடும் சவால்களைச் சந்தித்துவரும் வேளையில், சுகாதார கட்டமைப்பு வசதிகள் முறையாக இல்லாத ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது கடினமானதாகக் கருதப்படுகிறது
இதையும் படிங்க: ஜான் போல்டனின் புத்தகம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!