Latest Africa News வட ஆப்பிரிக்க நாடான பர்கினா பேஸோவில் பகுதி கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டுவருகிறது. அந்நாட்டின் ஒடுலான் மாகாணத்தில் உள்ள மசூதியில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் ராணுவ அதிகாரி தெரிவித்தார். மேலும் இத்தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதலே பர்கினா பேஸோவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திவருகின்றனர். பயங்கரவாதிகளின் தாக்குதலில் இதுவரை 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர், சுமார் மூன்று லட்சம் பேர் வேறு இடங்களுக்கு புல்மபெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாகவே பயங்கரவாதிகள் நடவடிக்கை உயர்ந்தது. இதன் காரணமாக அந்நாட்டில் பல்வேறு இடங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: ஆப்பிரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்ஃபோன்!