ETV Bharat / international

போட்ஸ்வானாவில் தொடரும் பேரழிவு - 275க்கும் அதிகமான யானைகள் உயிரிழப்பு!

கபோரோன் : தென்னாப்பிரிக்காவின் ஒகாவாங்கோ டெல்டா பகுதியில் கடந்த சில வாரங்களில் மட்டும் 275க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

யானைகள் உயிரிழப்பு
யானைகள் உயிரிழப்பு
author img

By

Published : Jul 5, 2020, 9:26 AM IST

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கனடா ஆகிய நாடுகளில் உள்ள ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்வதற்காக உயிரிழந்த யானைகளின் மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு யானைகள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அதனை ஆய்வாளர்கள் தற்போது மறுத்துள்ளனர். யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறித்து இன்னும் கண்டறியப்படாத நிலையில், யானைகளின் மர்மமான மரணங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் அமைப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும், இறந்த யானையின் தந்தங்களை சேதப்படுத்த வேண்டாம் என்று உள்ளூர் வாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் அமைப்பகத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். வேட்டையாடுதல் ஒரு அச்சுறுத்தலான விஷயமாக உள்ளது என்றும் கூறியுள்ள அவர், யானைகளின் இறப்புகளுக்கு வேட்டையாடுதல் தான் காரணம் என்று முழுமையாக கூற இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.

"இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய பேரழிவுகளில் யானைகளின் உயிரிழப்பும் ஒன்றாகும்" என்று பாதுகாப்புக் குழுவின் இயக்குநரும் தேசிய பூங்கா மீட்பு இயக்குநருமான மார்க் ஹிலே தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் போல், யானைகளை வேறு ஏதேனும் புதிய நோய் பாதித்திருக்குமா என்ற கோணத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போட்ஸ்வானா உலகின் மிக அதிகமான யானைகளைக் கொண்ட நாடாகும். கடந்த 2013ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வான்வழி கணக்கெடுப்பின்படி, அங்கு ஒரு லட்சத்து 56,000க்கும் அதிகமான யானைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காட்டு ராஜாக்களை அழிப்பது காட்டை துண்டாடுவதற்கு சமம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.