ETV Bharat / international

நைஜீரியா பள்ளி மாணவர்கள் கடத்தல்; போகோ ஹாராம் அமைப்பு பொறுப்பேற்பு

நைஜீரியாவில் 330 பள்ளி மாணவர்கள் கடத்தலில் போகோ ஹாராம் அமைப்பு ஈடுபட்டுள்ளதாக பொறுப்பேற்றுள்ளது.

author img

By

Published : Dec 16, 2020, 4:51 PM IST

Boko Haram
Boko Haram

நைஜீரியாவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அரசுப் பள்ளி மாணவர்கள் 333 பேர் மாயமாகினர். இவர்களை பயங்கரவாத அமைப்பு கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், இந்த சம்பவம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பள்ளி மாணவர்களை கடத்தி வைத்தது நாங்கள் தான் என போக்கோ ஹாராம் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், எதிர்பாராத விதமாக பள்ளிக்குள் நுழைந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

வடமேற்கு நைஜீரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த பயங்கரவாத அமைப்பு, ஐ.எஸ். அமைப்பின் முக்கிய கிளை அமைப்பாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்பு நடத்தியுள்ள பயங்கரவாத தாக்குதல் காரணமாக சுமார் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடத்தப்பட்ட மாணவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் தற்போது தீவிரம் காட்டிவருகிறது.

இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமைக்கு எதிரான அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.