கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான 302 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானம்கடந்த வாரம்விபத்துக்குள்ளானது. இதில்157 பேர் உயிரிழந்தனர். இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, விமானத்தின் 'கறுப்புப் பேட்டி' பாரீஸுக்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய எத்தியோப்பிய போக்குவரத்துத் துறை அமைச்சர் டக்மாவிட் மோகெஸ் பேசுகையில், "விபத்துக்குள்ளான எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் 302 விமானத்தின் 'பிளாக் பார்க்' நல்ல நிலைமையில் மீட்டெடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
ஆய்வில், 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்தோனேஷியாவின் லையன் ஏர் விமான விபத்திற்கும் இதற்கும் தெளிவான பல்வேறு ஒற்றுமைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கை இன்னும் 30 நாட்களில் எத்தியோப்பிய அரசு வெளியிடும்" என தெரிவித்துள்ளார்.
செயற்கைக்கோள் பதிவுகளின்படி, விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானம் புறப்படுகையில் அசாதாரணமாக பறந்ததாக தெரியவந்துள்ளது. பாதுகாப்புக் காரணங்கள் கருதி 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் தரை இறங்க தடைசெய்துள்ளது.