ETV Bharat / international

போராட்ட எதிரொலி: அல்ஜீரியா அதிபர் ராஜினாமா! - அப்தெலாசிஸ் புத்தப்பிலிக்கா ராஜினாமா

அல்ஜியர்ஸ்: அல்ஜீரியா அதிபர் பதவி விலக வலியுறுத்தி தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், அதிபர் அப்தெலாசிஸ் பவுடேபிலிகா ராஜினாமா செய்தார்.

Abdelaziz Bouteflika
author img

By

Published : Apr 3, 2019, 9:34 AM IST

ஆப்பிரிக்காவின் வடபகுதியில் உள்ள நாடு அல்ஜீரியா. நான்குமுறை பதவியில் இருந்த இந்நாட்டு அதிபர்அப்தெலாசிஸ் பவுடேபிலிகா, தேர்தலை நடத்தாமல் பதவிக் காலத்தை நீட்டித்துவந்தார்.

இதனையடுத்து 5ஆவது அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில், அப்தெலாசிஸ் பவுடேபிலிகா சிகிச்சைக்காக வெளிநாடு சென்று விட்டார். இதனால், நாட்டில் சில அரசு இயந்திரங்கள் முடங்கியது. மேலும், அப்தெலாசிஸ் பவுடேபிலிகா அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டம் வெடித்தது. அதனால் வரும் அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.

இருந்தும், தேர்தல் அறிவிக்காமல் தாமதப்படுத்தும் அதிபர் அப்தெலாசிஸ் பவுடேபிலிகா அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மீண்டும் போராட்டம் வெடித்தது.

இதைதொடர்ந்து அல்ஜீரிய ராணுவ தளபதி அகமது கொய்த் சலா, சமீபத்தில் அதிபரை சந்தித்து 102 அரசியல் சாசனத்தை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, அப்தெலாசிஸ் புத்தப்பிலிக்கா புதிய அமைச்சரவையை அமைத்தார்.

இதனை தொடர்ந்து, அதிபர் பதவியில் இருந்து அப்தெலாசிஸ் புத்தப்பிலிக்கா ராஜினாமா செய்துள்ளார். இது அந்நாட்டு மக்களிடை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், மூன்று மாதங்களுக்கு அதாவது 90 நாட்கள் அல்ஜீரியா தலைவராக அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் இருப்பார்;அந்த 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்பது அந்நாட்டின் சட்டவிதியாகும்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.