ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் கரோனா பரவியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 21 லட்சத்து ஆறாயிரத்து 119 பேர் அங்கு கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்து 432 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஆப்பிரிக்காவில் அதிக அளவிலான பாதிப்புகள் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ளன. 7.72 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பாதிப்புகளும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் அந்நாட்டில் இதுவரை நிகழ்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் மொராக்கோவும், மூன்றாவது இடத்தில் எகிப்தும் உள்ளன. ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களில் பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிரிக்காவில் இரண்டாம் அலை ஏற்பட்டால் அது அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளின் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் பின்தங்கியுள்ளதால், கரோனா பாதிப்புகளைத் தாக்குபிடிப்பது கடினம் என நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும்பட்சத்தில் அதை ஆப்பிரிக்க மக்களுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது எனவும் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன.
இதையும் படிங்க: உலக அளவில் 6 கோடியைத் தாண்டிய கரோனா பாதிப்புகள் : 14 லட்சத்துக்கும் அதிகமானோர் பலி