கடந்த மூன்று நாட்களாக ஆப்பிரிக்க நாட்டில் பெருமழை பெய்து வருவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் நாட்டின் பல முக்கியப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்டடங்களும், வீடுகளும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 51 பேர் பலியான சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
இது குறித்து தெற்கு ஆப்பிரிக்க ஜனாதிபதி, ’கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுவதற்காக எகிப்தில் கலந்துகொள்ளவிருந்த உச்சி மாநாட்டை ரத்து செய்து வீட்டிற்கு வந்துவிட்டேன். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்புப் பணிகளில் ஈடுபடுவோம்’ என ட்வீட் செய்துள்ளார்.