ETV Bharat / international

லிபியாவில் திருமண நிகழ்ச்சியின்போது ஏவுகணைத் தாக்குதல் - 42 பேர் பலி

author img

By

Published : Aug 6, 2019, 8:15 AM IST

திரிப்போலி: முர்சுக் நகரில் நடைபெற்ற திருமண விழாவின்போது நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் 42 பேர் பலியாகினர்.

லிபியா

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவை ஆண்ட முஅம்மர் அல் கதாஃபி 2011ஆம் ஆண்டு மறைந்தபின், அந்நாட்டில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவுகின்றன. லிபியாவின் கிழக்குப் பகுதி லிபியன் தேசிய ராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், மேற்குப் பகுதி ஐநாவின் ஆதரவுடன் செயல்படும் தேசிய இடைக்காலப் பேரவை அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

இருபிரிவினருக்கிடையே தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட தகவலின்படி, லிபியன் தேசிய ராணுவத்தால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியாவின் தென்மேற்கு பகுதியான முர்சுக் நகரில் நேற்று நடைபெற்ற திருமண விழாவின்போது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 42 பேர் பலியாகினர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு லிபியன் தேசிய ராணுவம்தான் காரணம் என்று குற்றம்சாட்டு எழுந்தது.

ஆனால், தாங்கள் அப்பாவி மக்களை நோக்கி இத்தாக்குதலை நடத்தவில்லை என்று லிபியன் தேசிய ராணுவத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று லிபியன் தேசிய ராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.