கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் இன்று மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் எருதுவிடும் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. எருதுவிடும் விழாவைக் காண்பதற்காக அங்கிருந்த ஒரு வீட்டின் மேற்கூரை மீது 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமர்ந்திருந்தனர்.
விபத்து
ஒருகட்டத்தில் எடை தாங்காமல் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் மேற்கூரையின் மேல் அமர்ந்திருந்தவர்கள் மற்றும் கீழே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவா்கள் என பலர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர்.
இருவர் உயிரிழப்பு
மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுமி உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனா். இதில் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெரியவர்கள் என பலருக்கும் கை, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. விபத்தில் இதுவரை 30 பேர் காயம் அடைந்துள்ளார்கள். காயமடைந்த அனைவரும் கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வேப்பனஹள்ளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதையும் படிங்க:அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - ஜனவரி 14இல் ஆரம்பமாகிறது வீர விளையாட்டு