கடந்த ஜூன் 7ஆம் தேதி சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு ரயில் மூலம் வந்த 36 வயது பெண் அவரது 11 வயது மகன் இருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது.
இருவருக்கும் அன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று (ஜூன் 9) வெளியாகின. அதில் தாய், மகன் இருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதனால் இவர்கள் இருவரும் கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 9) காலை கோவையில் புதிதாக மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, கோவையில் ஒரேநாளில் ஐந்து பேர் கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளர். இதனால் காது, மூக்கு சிகிச்சைப் பிரிவு அம்மருத்துவமனையில் மூடப்பட்டுள்ளது.