ETV Bharat / entertainment

15 மில்லியன் பார்வைகளை கடந்த ‘வேற மாறி ஆபிஸ்’ தொடர் - ஆஹா ஓடிடியில் மக்கள் வரவேற்பு! - vera maari office series

Vera maari office web series: ஆஹா தமிழ் ஓடிடி இணையதளத்தில் சமீபத்தில் வெளியான ”வேற மாறி ஆபிஸ்” தொடர் 15 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஆஹாவில் வரவேற்பு! 15 மில்லியன் பார்வைகளை கடந்த ‘வேற மாறி ஆபிஸ்’ தொடர்

author img

By

Published : Aug 20, 2023, 4:52 PM IST

சென்னை: பல சுவாரஸ்யமான தொடர்களையும், திரைப்படங்களையும் கொடுத்து வரும் ஆஹா தமிழ் ஒடிடி இணையதளத்தில் ’டெய்லி சீரிஸ்’ வரிசையில் சமீபத்தில் வெளியான ”வேற மாறி ஆபிஸ்” தொடரின் 6 எபிசோடுகள் வெளியான நிலையில், வெற்றிகரமாக 15 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

வேற மாறி ஆபிஸ் தொடரை 50 அத்தியாயங்களாக எடுக்க இருப்பது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதற்காக விழா நேற்று (ஆகஸ்ட் 19ஆம் தேதி) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நட்சத்திரங்களான விஷ்ணு விஜய், ஆர்.ஜே.விஜய், விக்கல்ஸ் விக்ரம், வி.ஜே.பார்வதி, ஷியாமா, லாவண்யா, வி.ஜே.பப்பு, சவுந்தர்யா நஞ்சுண்டன், கண்ணதாசன், சஞ்சீவ் ஆகியோருடன் இத்தொடரின் இயக்குநரான சிதம்பரம் மணிவண்ணன் மற்றும் தயாரிப்பாளர் சிவகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, சின்னத்திரை நடிகையான லாவண்யா பேசுகையில், வேற மாறி ஆபிஸ் தொடரில் என் கதாபாத்திரத்தின் பெயர் ரம்யா. நீங்கள் லாவண்யாவைப் பார்த்தால் ரம்யாவைப் பார்க்க வேண்டாம். ரம்யாவைப் பார்த்தால் லாவண்யாவைப் பார்க்க வேண்டாம். எனக்கே என்ன இது நம் கேரக்டரையே நடிக்கச் சொல்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. படப்பிடிப்பு தளம் மிகவும் ஜாலியாகவும், சந்தோசமாகவும் இருக்கும். என் ஸ்டோரி பார்ப்பவர்களுக்கு அது ஏற்கனவே தெரிந்திருக்கும். இந்த தொடருக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் என்றார்.

மேலும், வி.ஜே. பப்பு பேசும் போது, வேற மாறி ஆபிஸ் தொடர் ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது. மறக்காமல் இந்த தொடரைப் பார்த்து ஆதரவு அளியுங்கள். ஆஹா ஓடிடி தளத்தை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள். ஒரு படைப்பின் வீச்சு என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால், அது நாமாக தேடிப் போய் வேண்டுகோள் வைப்பதாக இருக்கக் கூடாது. அது தான் உண்மையான வீச்சு. அந்த வெற்றியை “வேற மாறி ஆபிஸ்” தொடர் பெற்றிருக்கிறது.

இதையும் படிங்க: நிலவில் விழுந்து நொறுங்கியது லூனா 25 விண்கலம் - தகர்ந்தது ரஷ்யாவின் கனவு!

ஏனென்றால் நான் திருச்சிற்றம்பலம் படத்தின் ஓராண்டு வெற்றியை கொண்டாடும் நிகழ்விற்குப் போயிருந்தேன் அப்பொழுது அவர்கள் உங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். எனக்குப் புரியவில்லை. பின்னர் தான் “வேற மாறி ஆபிஸ்” தொடரின் இரண்டாம் எபிசோடை அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்பது எனக்குப் புரிந்தது. இதுவே அதன் வெற்றி. மேலும் இந்திய அளவில் எந்த தொடரிலும் இல்லாத புதுமையாக இத்தொடரில் 50 எபிசோடுகள் நாங்கள் எடுக்க இருக்கிறோம். இதுவும் ஒரு சாதனை தான். வேற மாறி ஆபிஸ் தொடர் பார்ட் 1, 2,3 என்று சென்று கொண்டே இருக்க வேண்டும். அதில் நாங்களே நடிக்க வேண்டும். இனி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அதனைத்தொடர்ந்து, ஆர்.ஜே. சரித்திரன் பேசுகையில், என் கதாபாத்திரம் ஒரு சிடுமுஞ்சி ஹெச்.ஆர் கதாபாத்திரம். எப்பொழுதும் வடை போச்சே என்று நான் தான் பிற கதாபாத்திரங்களை கலாய்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் இந்த “வேற மாறி ஆபிஸ்” தொடரில் எல்லோரும் என்னை கலாய்ப்பார்கள். எவருக்குமே என்னைப் பிடிக்காது. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம். இன்றைய காலச்சூழலில் பணிச்சுமை எவ்வளவு அழுத்தத்தைக் கொடுக்கிறது என்பதும் இக்கதையில் இருக்கிறது. அனைவரும் இந்தத் தொடரைப் பார்த்து ஆதரவு தாருங்கள். நான் அடிமட்ட நிலையில் இருந்து பல தடைகளை அவமானங்களை கடந்து இந்த இடத்திற்கு வந்தவன். அதனால் உண்மையாகவே நான் ஹெச்.ஆர் என்னும் பதவியில் இருந்தால் கூட நான் அனுபவித்த கொடுமைகளை இன்னொருவருக்கு செய்ய மாட்டேன் என்று கூறினார்.

மேலும், ஆர்.ஜே. மிர்ச்சி விஜய் பேசும் போது, எங்கள் அணியே மிகவும் கற்பனை நயம் வாய்ந்த அணி. வந்தவுடனே நான் பேசிவிடுகிறேன் என்று கூறினேன். இல்லை கடைசியாகப் பேசு என்று பாதி பேர் கிளம்பிச் சென்று இருக்கைகள் காலியானப் பின்னர் என்னை பேச அழைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் என்னோடு நடித்த சக நடிகர்கள் எப்படி நடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இங்கு மேடையில் எல்லாரும் சிறப்பாக நடிக்கிறார்கள். என்னை தேர்வு செய்யும் போது நீங்கள் தான் முக்கியமான கதாபாத்திரம், உங்களை வைத்துத் தான் மொத்த கதையும் நகர்கிறது என்று சொன்னார்கள். விக்கல் விக்ரம் என்னிடம் வந்து இதே டயலாக்கை கூறினான். அப்பொழுது தான் எல்லோரையும் ஒரே டயலாக் பேசி ஓகே செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

இந்த தொடரில் நடித்ததன் மூலம் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். எங்கள் இயக்குநர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், அவருக்கு நன்றி. நண்பரும் தயாரிப்பாளருமான சிவகாந்த் அவர்களுக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் நன்றி. நானும் ஐ.டி துறையில் சில ஆண்டுகள் வேலை செய்தவன் என்பதால் இந்தக் கதையை என் வாழ்வோடு பொருத்திப் பார்க்க முடிந்தது. நீங்களும் பார்த்து ஆதரவு தாருங்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க: வால்பாறை எஸ்டேட்டில் வணக்கம் போடும் காட்டு யானைகள் - வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.